பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 தமிழ் பயிற்றும் முறை

கூடாது. ஆசிரியர் புரியும் துணையெல்லாம் மாளுக்கர்கள் கொண்ட கருத்தை வளர்ப்பதற்கும், உறுதிப் படுத்து. வதற்கும் துணையாக இருக்கவேண்டுமேயன்றி அதைச் சிதைக்கவோ மாற்றவோ துணையாக இருத்தல் கூடாது. இதைக் கவிதை கற்பிக்கும் முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் ஆசிரியர்கள். கவிதைகளைத் துய்க்கும் பயிற்சி மானுக்கர்கட்கு ஏற்பட்டு விட்டால் இரண்டாவது தடவைப் படிக்கும்பொழுதே கவிதையை ஒரளவு தம் உள்ளத்தில் அமைத்துக் கொண்டுவிடுவர். அடுத்து ஒன்றிரண்டு தடவை படிக்கும்பொழுது பாட்டின் உயிர்நிலைக் கருத்துக்குப் போய் அதை எடுத்துக் காட்டவேண்டும். அக்கருத்தை, காட்சியை அல்லது கதை நிகழ்ச்சியை நமக்கு உணர்த்தவே அப்பாடல் கவிஞளுல் பாடப் பெற்றது என்பதை அவர்கள் அறியச் செய்தல் வேண்டும்.

பாடலை அல்லது பாடல்களே ஒரு முழுப் பொருளாகக் கருதவேண்டும். பாடல்களைப் பல விவரங்கள் அடங்கியவை என்று கருதி சொற்சேதம் செய்து சொல்லுக்குச் சொல் பொருள் கூறியும், பாடல்களில்வரும் அணிகளுக்கும் இலக்கணக் குறிப்புக்களுக்கும் தனித்தனி விளக்கம் கூறியும் பாடல்களே விளக்குதல் தவறு. முதலில் சொல் சொல்லாகப் பிரித்து உரை சொல்லுவது, உரைநடையாக்குவது, உவமைப் பொருள் கேட்பது முதலியவற்றைக் கையாண்டு பழைய முறையிற் கற்பித்தல் கவிதைச் சுவையைக் கெடுத்து கவிஞனின் உணர்ச்சியை அறியத் துணைசெய்வ தில்லை என்று இக்காலத்தவர் அம்முறையைக் குறைகூறுகின்றனர். பாடல்களைப் படித்து அவற்றின் உயிர் நிலக் கருத்தையும், உணர்ச்சி நிலையையும், அழகையும் அறிந்த பிறகு அவற்றை மீண்டும் நன்கு உணர்வதற்குத் துணைபுரியுமளவிற்கு விளங்காத சில அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறலாம் ; சில விவரப் பகுதிகளே விளக்கலாம். இறுதியாக ஒருமுறை பாடல்களே இன்ளுேசையுடன் பாடி மாளுக்கர்களைக் கவிதைச் சுவையின் கொடுமுடிக்கு அழைத்துச்செல்லவேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம், பாரதம் போன்ற நீண்ட கதைப் பகுதி