பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழ் பயிற்றும் முறை

மிளிர்கின்றன. சைவ சமய குரவர்கள் நல்கிய பாடல் களும் ஆழ்வார் மணிகள் அருளியுள்ள LFeg:తత్రాt్క இராமலிங்க அடிகள் பாடியுள்ள திருவருட்ப்ாக்களும் கல்நெஞ்சத்தையும் கரைக்கவல்லவை ; ஊணினேச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தத்தை அளிக்கக்

கூடிவை.

தடித்தஓர் மகனைத் தந்தைஈண்டு அடித்தால்

தாய்உடன் அணைப்பள் ; தாய்அடித்தால் பிடித்துஒரு தந்தை அணைப்பன், இங்குஎனக்குப்

பேசிய தந்தையும் தாயும் 豫 பொடித்திரு மேனி அம்பலத்து ஆடும்

புனித நீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மையப் பாஇனி ஆற்றேன்.”

என்பன போன்ற இறை வழிபாட்டைக் கூறும் பாக்கள் நந்தமிழ் மொழியில் எண்ணிறந்தவை உள்ளன. தமிழ் மொழி பயில்வோர் அத்தகைய பாடல்களைப் படித்து இன்புற்றுப் பயனடையலாம்.

பயிற்றுமொழி : தமிழ் மொழி ஏனைய பாடங்களைப் பயிற்றும் மொழியாக (Medium) வந்த பிறகு அம்மொழியைக் கற்பிக்கும் நோக்கமும் விரிவடைந்திருக்கின்றது. எத்தனயோ கலைத் துறைகளைத் தமிழில் கற்பிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது ; கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக அமையவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்; அதுபற்றி ஆராய்ந்தும் வருகின்றனர். தாய்மொழியில் பொருளுணர்ந்து அறிவை வள்ர்த்துக் கொள்வதில் காலச்செலவு, பணச்செலவு முயற்சி ஆகியவை சுருங்கும் என்பது கூருமலே போதரும். புட்டிப்பாலே விடத் தாய்ப்பால் சிறந்ததன் ருே ? எனவே, தாய்மொழிப் பயிற்சியின்றி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உண்மையான அறிவு வளர்ச்சியே இல்லையென்று கூறிவிடலாம்.

    • திருவருட்பா-பிள்ளைச்சிறு விண்ணப்பம். பா-1