பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 தமிழ் பயிற்றும் முறை

2. சாய்ந்துவிழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து

தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள் காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்

கற்புடைமா தரையொத்தல் காண்மின் காண்மின்:

3. தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்

தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணுட்(டு) அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்

ஆவிஒக்க விடுவாளேக் காண்மின் காண்மின்!!

4. படவூன்று நெடுங்குந்தம் மார்பி னின்று

பறித்ததனை நிலத் துன்றித் தேர்மேல் நிற்பார் படவூன்றி விடுந்தொழிலோர் என்ன முன்னம்

பசுங்குருதி நீர்த்தோன்றும் பரிசு காண்மின் 81

இவ்ை நான்கு பாடல்களும் போர்க்களக் காட்சிகளை எடுத்துரைப்பன. கலிங்கப்பேயின் வேண்டுகோளின்படி காளிதேவி பேய்கள் சூழக் கலிங்கநாட்டுப் போர்களத்தைக் காணச் செல்லுகின்ருள். அங்குக் கண்ட காட்சிகளேத்தன்னுடன் வந்த பேய்களுக்குச் சுட்டிக்காட்டுகின்ருள். அவற்றுள் நான்கு காட்சிகளே இப்பாடல்கள் காட்டு கின்றன . - என்ற சிறு முகவுரையுடன் பாடல்களே சில தடவைகள் ஆசிரியர் இசையூட்டிப் படிக்கவேண்டும்.-- மாணுக்கர்களின் முகக் குறிப்பால் போதும் என்று. அறிந்தவுடன் படிப்பதை நிறுத்திப் பாடல்களின் உயிர் நிலக் கருத்துக்குப் போகவேண்டும்; மாளுக்கர்களின் மனக்கண்முன் பாடல்கள் சித்திரிக்கும் காட்சிகளைக் கொண்டு நிறுத்தவேண்டும். இதில் ஆசிரியரும் மாளுக்கரும் ஒத்துழைத்தால்தான் பெரும் பயன் விளையும்; விகு விடைமுறை கையாளப்படவேண்டும். கவிதை கற்பிக்கும் நோக்கத்தை மறந்து வினுக்கள் தேர்வு முறையிலிருக்கக் கூடாது. பாடல்கள் சித்திரிக்கும் காட்சிகள்-சூழ்நிலை

கலிங்கத்துப் பரணி (களம் பாடியது) உயர்நிலைப்

படிவ மாளுக்கர்கட்கு ஏற்றவை. * தோடி இராகத்தில் பாடலாம்.