பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 46.9

வகுப்பறையில் நிலவுமாறு ஆசிரியரின் குரல், சொல்லும் முறை முதலியவை அனைத்தும் அமைய வேண்டும். இவை சரியாக அமைந்தால் மாணுக்கர்கள் ஆசிரியருடன் நண்பர்கள் போல் ஒத்துழைத்துக் கவிஞன் காட்டும் காட்சிகளே மீட்டும் தம் மனக்கண்ணுல் காண முனைவர்.

முதற்பாடல்: முதலில் காளிதேவி பேய்க்கூட்டங்களுக்கு எவற்றைக் காட்டுகின்ருள் % 'பருந்தினத்தையும் கழுகினத் தையும்’. அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன ? 'வீரர்களின் உடல்களே உண்டு கொண்டிருக்கின்றன.” வீரர்களின் முகங்கள் எப்படிக் காணப்படுகின்றன ? 'முகமலர்ச்சியுடன். இவ்விடத்தில் ஆசிரியர் வீரர்கள் வீரத்துடன் போர்புரிந்து, களிப்புடன் உயிர் துறந்தமையால், அவர்கள் முக மலர்ச்சியுடன் விளங்கினர் என்பதைக் கூறலாம். மேலோர் என்பவர் யாவர்? இல்லறத்தில் உயர்ந்தோர்.” அவர்கள் முகம் மலர்வதற்குக் காரணம் ? “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்பதால்.’’ இயல் பாக இறந்துகிடக்கும் வீரர்களின் முகமலர்ச்சிக்குத் தம் உடலங்கள் பருந்துகளுக்கும் கழுகுகளுக்கும் விருந்தாகப் பயன்படுவதால்தான் என்று கவிஞன் படைத்துக் காட்டும்

கற்பனையை ஆசிரியர் எடுத்து இயம்பலாம்,

இரண்டாம் பாடல் : இரண்டாவதாகக் காளி காட்டும் காட்சி யாது? மதயானைகள் இறந்து கிடக்கும் நிலை.” அந்த யானைகளுடன் வேறு எவை கிடந்தன? “அரசர்க்குரிய கொடிகள்’’. கொடிகளும் யானைகளும் எதில் தோய்ந்து கிடந்தன? 'குருதி வெள்ளத்தில்”. இக்காட்சியால் கவிஞன் நினைவு படுத்தும் வேறு காட்சி யாது ?

" காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகும்

கற்புடைமா தரையொத்தல்”

காந்தர், கனல் அமளி, கற்புடை மாதர்-இவர்களே நினேவுக்குக் கொணர்ந்தவை யாவை ? “கடகளிறு, தடங்குருதி, கொடிகள்”. இவ்விடத்தில் கவிஞன் கொடிகளைக் கொடி போன்ற பெண்களுடன் ஒப்பிட்டுக் காட்டும் நயத்தினைச்