பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A70 தமிழ் பயிற்றும் முறை

சுட்டலாம். மாளுக்கர் அறிவு நிலையையும் சுவை யுனரும் ஆற்றலேயும் ஒட்டி,

பொடியுடைக் காள மெங்கும்

குருதிநீர் பொங்க வீழ்ந்த

தடியுடை யெயிற்றுப் பேழ்வாய்த்

தாடகை தலைகள் தோறும்

முடியுடை யரக்கற் கந்நாள்

முந்தியுற் பாத மாகப்

படியிடை யற்று வீழ்ந்த

வெற்றியம் பதாகை யொத்தாள்.'

என்ற கம்பன் பாடலை எடுத்துக் காட்டி, அக் கவிஞனும் இறந்து வீழ்ந்த தாடகையை வெற்றிக் கொடிக்கு உவமை யாகக் கூறியிருத்தலே விளக்கலாம்.

மூன்ரும் பாடல் : மூன்ருவதாகக் காளிதேவி என்ன காட்சியைக் காட்டுகின்ருள் ? தலைவி யொருத்தி தன் கணவன் உடலைத் தாங்கிய வண்ணம் உயிர் துறக்கும் நிலையை.” தலைவி தன் கணவன் உடலைத் தாங்கிய வண்ணம் இறப்பதற்குக் கவிஞர் படைத்துக் காட்டும் இரண்டு காரணங்கள் யாவை ? ஒன்று, பூமிதேவி தன் கணவன் உடலைத் தீண்டக்கூடாது என்பது; மற்ருென்று, விண்ணுட்டு மகளிர் தன் கணவன் உயிரைப் புணரக்கூடாது என்பது.’ இதிலிருந்து என்ன அறிந்து கொள்ளக்கூடும்? “ தமிழ் நாட்டுப் பெண்கள் கற்பு மிக்கவர்கள் என்பதும், தம் கணவர் பிற பெண்டிரை நயப்பதைப் பொருள் என்பதும்.”

நான்காம் பாடல் : வீரர்களின் மார்பில் என்ன பாய்ந்து நிற்கின்றது ? நீண்ட வேலாயுதம் ”. அவ் வீரர்கள் என்ன செய்கின்றனர் ? அந்த வேலைப் பிடுங்கி அதை நிலத் தில் ஊன்றிக்கொண்டு தேர்மேல் தாண்டிக்குதிக்கின்றனர்Polevatut செய்வது போல. இவ்வாறு குதிக்கும் காட்சி

  • பால-தாடகை வதை-73,