பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 47 t

கவிஞருக்கு நினைவூட்டும் மற்ருெரு காட்சியாது? " பட கோட்டி துடுப்பைக் கொண்டு படகு வலிக்கும் காட்சி.” எவை அக்காட்சியை நினைவு படுத்தத் தூண்டின ? ' வீரர்கள் படகோட்டிகளையும், தேர்கள் படகுகளையும், வேல்கள் துடுப்புக்களையும், பசுங்குருதி யாற்று நீரையும் நினைவு படுத்திப் படகு வலிக்கும் காட்சியை நினைவு படுத்தின.”

இவ்வாறு மாணுக்கர்களுடன் ஒத்துழைத்துக் காட்சிகளே வகுப்பறையில் நல்ல முறையில் திரும்பப் படைத்த பிறகு, பாடல்களே ஆசிரியர் மீட்டும் ஒரு முறை இசையுடன் பாடி மாளுக்கர்களைச் சுவையின் கொடுமுடிக்குக் கொண்டு. செலுத்த வேண்டும். இஃது ஒரு முறையே யன்றி, இதுதான் முடிவான முறை யென்று சொல்லமுடியாது. மாளுக்கர்களின் வயது, அவர்கள் வாழும் சூழ்நிலை (நகர்ப்புறம், நாட்டுப்புறம்), அறிவுநிலை ஆகியவற்றை யொட்டி இம்முறையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.

எடுத்துக்காட்டு-2

1. சூடுகின்ற துழாய்முடியோன் சுரருனே

முனிவர்களும் சுருதி நான்கும்

தேடுகின்ற பதஞ்சிவப்பத் திருநாடு பெறத் தூது செல்ல வேண்டா :

வாடுகின்ற மடப்பாவை தன் வரமும் என்வரமும் வழுவா வண்ணங்

கோடுகின்ற மொழியவன்பால் எனைத்துTது

விடுகஇனிக் கொற்ற வேந்தே.

2. மலைகண்ட தெனவென்கை மறத்தண்டின்

வலிகண்டும், மகவான் மைந்தன் சிலைகண்டும், இருவர்பொருந் திறல்கண்டும்,

எமக்காகத் திருமால் நின்ற நிலைகண்டும், இவள் விரித்த குழல் கண்டும்,

இமைப்பொழுதில் நேரார் தம்மைக்