பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 தமிழ் பயிற்றும் முறை

கொலைகண்டும், மகிழாமல் அவன்குடைக்கீழ்

உயிர்வாழக் குறிக்கின் ருயே.”*

இவை இரண்டு பாடல்களும் கதை நிகழ்ச்சியை எடுத். துரைப்பன. கிருட்டினனைத் தூதனுப்ப வேண்டுமென்ற ஏற்பாடு நடை பெறுகின்றது. தருமன் கிருட்டினனேத் தூது சென்று வரவேண்டுமென வேண்டுகின்றன். வீமன் இனிச் சமாதானம் கூடாது என்று சினந்து கூற, கண்ணன் அவன் சினத்தைத் தணிவிக்கின்ருன் , தரு:ன் சமாதானம் கூறுகின்றன். இந்நிலையில் வீமன் பேசுகின்றன். மேற். காட்டிய பாடல்கள் இரண்டும் வீமன் கூற்றுக்களாக வருபவை.

இதை 8 கதை நிகழ்ச்சியில் கவிதைகள் வரும் இடம் சுட்டியபிறகு கவிதைகளே இசை யேற்றிப் படிக்க வேண்டும். மாளுக்கர்கள் பாடல்களின் உயிர் நிலைக்கருத்தை ஓரளவு உளத்தில் கொள்ளும்வரை அவற்றைத் திரும்பத் திரும்பப் பாடவேண்டும் : ஆசிரியர் தன்னே வீமனுகக் கருதிப் பாடவேண்டும். அப்படித்தானே கவிஞன் உணர்ந்து பாடியிருப்பான் ?

  • சூடுகின்ற.........செல்ல வேண்டா என்ற அடிகளே ப் படிக்கும்பொழுதே கண்ணன் தூது சென்ருல் ஒருகால் சந்து செய்வித்துப் போர் நேரிடாது போகக்கூடும் என்றும், அதனுல் முன் செய்த சூளுரைகள் யாவும் நிறைவேருமற். போகக்கூடும் என்றும் வீமன் கருதுவதை மானுக்கர்கள் உணரும்படி படிக்கவேண்டும். வாடுகின்ற......வேந்தே ’ என்ற அடிகளைப் படிக்கும்பொழுதே வீமனுடைய சினவுணர்ச்சியின் குறிப்பு ஒருவாறு புலப்படும் வண்ணம் படிக்கவேண்டும் தன்னைத் தூதனுப்பினுல் தனது
  • வில்லிபாரதம் (கிருட்டினன் தூதுச் சருக்கம்). உயர்நிலைப் படிவ மாளுக்கர்கட்கு ஏற்றவை.

காம்போதி, கல்யாணி, மத்யமாவதி, அடாளு ஆகியவற்றில் ஏதாவதோர் இராகத்தை மேற்கொள்ளலாம்.