பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.478 தமிழ் பயிற்றும் முறை

‘சாவது ஒரு புதிய காரியமல்ல !’ வறுமையையும் செல்வ நிலையையும் ஒன்ருகப் பாவிக்கின்ருர் கவிஞர் என்பதை எந்த அடிகள் காட்டுகின்றன ?

"இனிதென மகிழ்ந்தன்று மிலமே; முனிவின்

இன்ன தென்றலும் இலமே?”

என்ற அடிகள்.’’ உயிர்கள் எவ்வாறு இன்ப துன்பங்களே

அனுபவிக்கின்றன என்பதைக் கவிஞர் எப்படிக் கூறுகின்ருர் ? நீரின் வழியே இயக்கப்படும் மிதவைபோல உயிர்கள் அவற்றை அனுபவிக்கும்.” இவ்விடையை மாணுக்கர்கள் கூறுவது சற்றுக் கடினம். காரணம், பாட்டின் நடை கடினம்; கூறும் முறையும் கடினம்; மொழியும் கடினம். கருத்தும் அவர்களின் பட்டறிவிற்கு அப்பாற். பட்டது. இதை நன்கு ஆசிரியரே விளக்கிச் சொல்ல வேண்டியும் நேரிடலாம். மழை எப்படிப் பெய்கின்றது ? எப்பொழுது பெய்கின்றது ? என்ற விவரங்களே யாரும் முன்னரே அறிந்து சொல்ல இயலாது. இன்றைய அறிவியலும் அந்த அளவுக்கு வளரவில்லே, எப்படியோ மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வருகின்றது. அதுபோலவே, உலகில் நன்மைகளும் இருக்கின்றன ; தீமைகளும் இருக்கின்றன. ஏன் இருக்கின்றன என்பதை நம்மால் தீர்மானித்துச் சொல்லமுடியாது. ஏதோ இருக்கின்றன; அவ்வளவுதான். உயிர்கள் அவற்றைத் துய்ப்பதுதான் ஊழின்செயல்'முறை வழிப்படுதல்”. உயிர்கள் யாவும் ஆற்று நீரில் இயக்கப்படும் மிதவைகள் போலத்தான். எவ்வளவு கற்பனை ஆன்று அவிந்து அடங்கிய சான்ருேரல்லவா? அவர் ஊகித்து எதனையும் சொல்லமுடியும்; கண்ணுல் கானும் காட்சிகளால் ஆராய்ந்து சொல்லமுடியும். நூலறி. வில்ை நுணுகியறிந்து சொல்லமுடியும். "திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ என்றல்லவா கூறுகின்ருர்? இவ்விடத்தில் இவ்வாறு ஆசிரியர் விளக்கிக் கூறவும் நேரிடும். பாட்டு கடினமானது; பண்டைய நடையினது. யாவரும் கேளிர்’ என்பது கவிஞரது கொள்கையாகும் என்பது எவ்வாறு அறியப்படுகின்றது ?