பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 477°

" பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

என்ற அடிகளால் இது தெளிவாகின்றது”. இவ்வாறு இப்பாடலை விளக்கிய பிறகு மாணுக்கர்களைக்கொண்டே கருத்துக்களைத் தொகுத்துக்கூறச் செய்யலாம். இறுதியாக ஒருமுறை பாடலே ஆசிரியர் பெருமிதத்துடன் இசையூட்டிப் படித்தால் மாணுக்கர்கள் கவிஞரின் இதயத்தையே தொட்டுப் பார்த்து விடுவர்.

இத்தகைய உயர்ந்த பாடல்கள் மாளுக்கர்களின் வயது, அறிவுநிலை, அனுபவநிலை ஆகியவற்றிற்கேற்றவாறு விளக்கம் அடையும். அதனுல்தான் இத்தகைய பாடல்களை ஐந்தாம் படிவப் பாடப் புத்தகங்களிலும் காண்கின்ருேம்; எம். ஏ. வகுப்புப் பாடத்திட்டத்திலும் பார்க்கின்ருேம்.

பாட்டுக்களை நெட்டுருச் செய்தல் : கவிதை பயிற்றுதலில் ‘நெட்டுருச் செய்தல் கருத்து வேறுபாடுள்ள கூறு. சாதாரணமாகப் பள்ளிகளில் மாணுக்கர்களைப் பாடல்களே நெட்டுருச் செய்யும்படி கட்டாயப்படுத்துவதால், அவர்கள் பாக்களைப் பயில்வதிலேயே வெறுப்புக் காட்டுவது நடைமுறையில் காணும் ஓர் உண்மையாகும். இம்முறையில் கல்வி கற்று வளர்ந்தவர்களும் இன்று கவிதைகளேக் காணுங்கால் பாலக்கண்ட தென்னுலிராமனின் பூனேபோல’ மிரளுவதையும் காணலாம். செஞ்சொற் கவியின்பத்தில்’ திளேக்க முடியாமல் மிரளும் அவர்களே க் கண்டு நாம்: இரங்குவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ? எனவே, புலி பயத்தைவிடக் கிலிபயத்தை நிரந்தரமாக உண்டாக்கும் நெட்டுருஞ் செய்தலே எந்த அளவில் மேற்கொள்ளலாம் * எவ்வாறு நடைமுறையில் வற்புறுத்தலாம்? என்பன போன்ற செய்திகளை ஒரளவு ஆராய்தல் இவ்விடத்தில் இன்றியமையாததாகின்றது.