பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 479

சொற்களையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ளவும் அவற்றை மனத்தில் நிலைபெற்றிருக்கச் செய்யவும் நெட்டுருச் செய்தல் துணையாக நிற்கின்றது. கவிதைகளின் சந்தப் பொலிவும், ஓசை நயமும் உள்ளத்தில் பதிந்து மனக்காதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் அத்தகைய பாடல்களே மேலுங் கற்கவேண்டும் என்ற எண்ணம் எழும். நெட்டுருச் செய்தல் புதிய கவிதைகளே இயற்றுவார்க்குப் பெருந்துணையாக இருக்கும். கட்டளைக் கலித்துறை, வெண்பா, கலிப்பா முதலிய பல பாடல்களை நெட்டுருச் செய்தும் படித்தும் பழகிய ஒருவருக்கு அவற்றை இயற்றுதல் சீமைக்காரையால் (Cement) இயன்ற சாலையில் வண்டி யோட்டுவது போலாகும். அங்ங்ணமின்றிக் காரிகை கற்றுக் கவி பாடத் தொடங்கினுல், பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது தோன்றும் ; அவ்வாறு இயற்றுவோர் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கவிதைகளை யாத்தலும் அருமையாக முடியும்.

நடைமுறையில் நெட்டுருச் செய்தல் : கவிதைகளை நெட்டுருச் செய்வதால் பல நன்மைகள் உண்டாகின்றன என்பது உண்மைதான். ஆளுல், மாணுக்கர்கள் அவற்றை மனப்பாடம் செய்ய வேண்டுமே ; அவர்களைக் கட்டாயப் படுத்தி நெட்டுருச் செய்யச் சொல்லுவதால் யாதொரு பயனும் விளையாது. எனவே, மாளுக்கர்கள் தாமாகவே அழகுணர்ந்து விருப்பத்துடன் நெட்டுருச் செய்தலே சிறந்ததாகும். சந்த நயமும், மோனை அழகும், பொருள் தெளிவும் உள்ள கவிதைகளே இளஞ்சிருர்கள் இயல்பாகவே விரும் புவர் ; நாம் சொல்லாமல் அவர்களாக அவற்றை நெட்டுருச் செய்து விடுவர். ஆகவே, மாணுக்கர்கள் விரும்பும் பகுதிகளே மட்டிலும் நெட்டுருச் செய்தால் போதுமானது. பள்ளி யிறுதித் தேர்வுக்குரிய பகுதிகளில் நெட்டுருச் செய்வதற்கென ஒதுக்கப்பெற்றுள்ள பகுதிகளைப்போல் ஒன்று முதல் ஐந்து படிவம் முடிய பயிலும் மாணுக்கர்களுக்கும் அதற்குக் கீழ் உள்ள தொடக்கநிலைப் பள்ளி மாணுக்கர்களுக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை நெட்டுருச் செய்யும்படி வற்புறுத்துதல் சரியன்று. வெளியார் நடத்தும்