பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 தமிழ் பயிற்றும் முறை

கூடும். இக்கருத்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் இவ்வாறு குறிப்பிடுவர் : “ வசன காவியங்களால் மக்கள் திருந்தவேண்டுமே யல்லாது செய்யுட்களே ப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அன்ருே ? ஐரோப்பிய மொழி களில் வசன காவியங்கள் இல்லாமல் இருக்குமானுல் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய தாய்மொழியில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கின்ற வரையில் இந்தத்தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.’’48 தாய்மொழி, பயிற்று மொழியாக அமைந்த பிறகு உரைநடை யின் இன்றியமையாமையை நன்ருக அறிகின்ருேம். உரை நடையில்ைதான் மக்கள் பல துறையில் கல்வியறிவிஜனப் பெறமுடியும் என்பதனையும் உணர்கின்ருேம்,

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகுதான் தமிழில் தனி உரைநடை நூல்கள் தோன்றின என்பது நாம் அறியவேண்டிய ஓர் உண்மை. வீரமாமுனிவர் இயற்றிய பார. மார்த்திக குரு கதை’தான் தமிழில் முதன் முதலாகத் தோன்றிய உரைநடை நூல் என்று பலர் கருதுகின்றனர். அவருக்கு முன்னர், பாதிரிமார்களால் எழுதப்பெற்ற உரை நடை நூல்கள் ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. நீண்ட காலம்வரை தமிழில் உரைநடை, வளர்ச்சி பெருமல் குன்றிக் கிடந்தது. காரணம், அரசியற் குழப்பங்களே. பண்டைய தமிழ் மன்னரும் குறுநிலமன்னர்களும் அரசாட்சியை இழந்து அல்லற்பட்டனர். பாளேயக்காரர்களின் ஆட்சி, ஃபிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், கர்நாடக நவாபுகள், இவர்களிடையே ஏற்பட்ட போர்கள், மராட்டியரின் படை யெடுப்பு, ஐதர் அலி திப்புசுல்தான்-இவர்களின் கலகங்கள் போன்ற அரசியற் குழப்பங்கள் நாட்டுமக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்தன. இந்தச் சூழ்நிலையில் சமயத் தொண்டாற்றி வந்த கிறித்துவப் பாதிரிமாரும் ஒரு சில சைவமட அதிபர்களும் ஒரு வாறு கல்வியில் கருத்தைச் செலுத்தி வந்தனர். இவர்கள் காலத்தில் ஒரு சிலர்தாம் உரைநடை நூல்களே இயற்றினர்.

  • பிரதாப முதலியார் சரித்திரம்-பக்கம் 301-302.