பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 485

பத்தொன்பதாம் நூற்ருண்டிற் அரசியற் குழப்பங்களும் போர்களும் ஒழிந்து நிலையான ஆங்கில அரசாங்கமும் ஏற்பட்டது. மக்கள் இயல்பாகவே கல்வியில் கருத்தைச் செலுத்தினர். சிறுவர்களின் கல்வியின் பொருட்டும் பாமரமக்களின் தேவையின்பொருட்டும் பல உரைநடை நூல்கள் எழுதப்பெற்றன. அன்றியும், செய்தித் தாள். களும் பருவ வெளியீடுகளும் பல தமிழ் நாட்டில் தோன்றி தொண்டாற்றத் தொடங்கின. ஆங்கில அறிவுபெற்ற பல அறிஞர்கள் பல்வேறு வகை உரைநடை நூல்களே எழுதத் தொடங்கினர். தேசிய இயக்கத்தின் விளைவாலும் தமிழில் பல உரைநடை நூல்கள் தோன்றின. -

இன்று மறுமலர்ச்சி இலக்கியங்கள்’ என்ற வரிசையில் தமிழில் பலவித இலக்கியங்கள் தோன்றி யுள்ளன ; தோன்றியும் வருகின்றன. இவற்றை இலக்கியத் தன்மையுள்ள உரைநடை நூல்கள், புதினங்கள், சிறுகதைச் செல்வங்கள், நாடகங்கள், கட்டுரைகள், திறனுய்வு நூல்கள் முதலிய வகைகளாகப் பிரிக்கலாம். உரைநடை இலக்கிய வகைகளில் புதினங்கள், சிறு கதைகள், நாட கங்கள், கட்டுரைகள், திறய்ைவு நூல்கள் ஆகியவை தமிழ்மொழிக்குப் புதியவை ; இவற்றில் பல மேட்ைடு இலக்கிய வகைகளே யொட்டி எழுந்தவை. இவற்றைப் பற்றிய ஒரு சில விவரங்கள் இந்நூலில் பிறிதோரிடத்தில் கூறப்பெற்றுள்ளன. கருத்துக்களைப் பா வடிவில் கூறும்பொழுது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்ற பா வகைகளையும் தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவின வகைகளையும் கையாளுவதைப் போலவே, உரைநடை வடிவில் கூறும்பொழுது இவ்வகை இலக்கிய வடிவங்கள் துணை நிற்கின்றன. இவற்றின்மூலம் அறிஞர்கள் எத்தனையோ விதமாக வாய்ப்புக்களை உண்டாக்கிக்கொண்டு தம் கருத்துக்களே வெளியிடுகின்றனர். கவிதை ஒரு கலையாக வளர்ந்துள்ளதுபோலவே, உரைநடையும் கலைத்தன்மையை யடைந்து சிறந்த இலக்கியமாக மிளிர்கின்றது.

31 பதினைந்தாவது இயலில்.