பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 487

இருவர் ஒரு பொருள்பற்றித் தருக்கிப்பது போன்ற முறையில் எழுதுவதும் பேசுவதும் தருக்க நடையாகும். பேச்சு வழக்கில் இன்று பன்மொழிச் சொற்கள் கலந்து இழிவாகவரும் நடையே கலப்பு நடை எனப்படும். இவற்றிற்கேற்ற எடுத்துக்காட்டுக்களே ஆங்காங்கு உரைநடை நூல்களில் கண்டு தெளிக.”42 -

பல்வேறு தமிழ் நடையைக் குறித்து இன்றைய தமிழ் வசன நடை என்ற நூல் நன்கு விளக்குகின்றது.* கருத்து வேறுபாடுகள் உள்ள நூலாயினும் நூலாசிரியர் பல செய்திகளே அங்குத் தொகுத்துக் கூறுகின்ருர். பல்வேறு தமிழ் நடைகள் அங்கு எடுத்துக்காட்டுக்களுடன் தரப் பெற்றிருக்கின்றன.

உரைநடை கற்பித்தல்

தாய்மொழிக் கல்வியில் உரைநடைப் பகுதியும் முக்கியமான தொன்று. அன்ருட வாழ்க்கைமுதல் ஆராய்ச்சித்துறைவரை நடைமுறையில் பயன்படக்கூடியது உரைநடை. ஆதலால், ஒருவர் ஒன்றெழுதினுல் அதனைப் பிறர் படித்தறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதுதல் வேண்டும். தெளிவான நடையே வேண்டற்பாலது ; அதையே யாவரும் மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை பன்முகவிரிவை அடைந்திருக்கும் இந்நாளில் உரைநடையே நடைமுறையில் அதிகம் வேண்டப்படுவது. எனவே, பள்ளியில் உரைநடைப் பாடத்தில் ஆசிரியர்கள் நன்கு கவனம் செலுத்த வேண்டும்.

உரைநடை பயிற்றலின் நோக்கங்கள் : உரைநடை பயிற்றலின் நோக்கங்கள் பல ; அவை யாவும் நடைமுறையிற் பயன்படுவன. தமிழ்மொழியைப் பிழையின்றித் தெளிவாகவும் கோவையாகவும் பேசவும் படிக்கவும் எழுதவும் பழகவேண்டியது முக்கிய நோக்கமாகும். மானுக்* ஆறுமுக முதலியார், ச. தமிழ் கற்பிக்கும் முறைகள்பக். 165.

  • ஆசிரியர் : மு. அருணுசலம். (தினமணி பிரசுரம்)