பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 தமிழ் பயிற்றும் முறை

புத்தகத்தில் எழுதிக் கொள்ளுமாறு மானுக்கர்களே ரவலாம். வகுப்புநிலக் கேற்றவாறு இம்முறையைக் கூட்டியும் குறைத்தும் மேற்கொள்ள வேண்டும்.

மொழியாசிரியர்கள் கலந்து ஆய்தல்’ என்னும் புது முறையையும் உரைநடைப் பாடத்தில் மேற்கொள்ளலாம். இம்முறையில் ஆசிரியர் மானுக்கர்களே வினவுதலுடன் பாடம் நின்று விடாது; ஆசிரியர்களும் ம. ஒக்கர்களும் வினுக்களே மாற்றி வினவிக் கொள்ளுதலும் மானுக்கங்கள் தமக்குள்ளேயே வினவிக் கொள்ளுதலும் நடைபெறும். இதில் ஆசிரியர் வகுப்பை இருபிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு வினவிக் கொள்ளச் செய்யலாம்; விடைக்கேற்ற மதிப்பெண்களைக் கொடுத்துச் சிறந்த பிரிவு எது என்பதை அறுதியிடல்ாம். இம்முறையால் மாளுக்கர்கட்குப் பாடத்தில் புதிய கவர்ச்சியும் ஊக்கமும் ஏற்பட்டு தன்னம்பிக் கையும் தன் முயற்சியும் வளரக்கூடும். இதில் வாய்க்குட் படிப்பையும் கையாளலாம்.

கீழ் வகுப்புக்களிலும் கீழ்ப் படிவங்களிலும் சில உரை நடைப் பகுதிகளே நடித்துக் காட்டலாலும் கற்பிக்கலாம்; உரையாடலை மேற்கொண்டும் கற்பிக்கலாம். குறிப்புக்கள் எழுதுதல், கட்டுரை எழுதுதல், மொழிப் பயிற்சிகள் முதலிய எழுத்து வேலைகளையும் தரலாம். ஐந்தாம் வகுப்பிலிருந்து அகராதிப் பழக்கத்தையும் மானுக்கர்களிடம் வளர்க்க வேண்டும். மேற் படிவங்களில் படித்த பகுதியைச் சுருக்குதல், அதன் உட்கருத்தை எடுத்துச் சொல்லுதல், கதைகளேத் தன்மை நிலையிலும் உரையாடல்களாகவும் எடுத் துரைத்தல் போன்ற பயிற்சிகளைத் தரலாம்.