13. இலக்கணம்
18ாம் நமது உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களைப் பல சொற்களால் பிறருக்குத் தெரிவிக்கின்ருேம். இவ்வாறு தெரிவித்தற்கு ஏற்பட்டுள்ள வழக்கினைத்தான் மொழி' என்ற பெயரால் குறிக்கின்ருேம். உலகில் பல்வேறு பகுதி யிலுள்ள மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். நமது கருத்தினைத் தனித்தனிச் சொல்லால் மட்டும் பிறருக்கு. அறிவித்தல் இயலாது. வா, போ, இரு என்பன போன்ற சில சொற்கள் தனித்தனியாக நின்று இடத்திற் கேற்பப் பொருளுணர்த்துமாயினும், அவ்வாறே எல்லாச் சொற்களும் தனித்தனியே நின்று பொருளுணர்த்தா. யானே, எருமை, குதிரை, நாய் என்று தனித்தனியே சொல்லைச் சொன்னல் கேட்பவர் அவற்றைக் குறித்து நாம் கூறக் கருதிய பொருளை அறிந்துகொள்ள இயலாது. அவற்றையே "யானே கரும்பு தின்னும்’, ‘எருமை பால் கறக்கும்’, ‘குதிரை வண்டி இழுக்கும்’, ‘நாய் வீட்டைக் காக்கும்’ என்பன போல வேறு சில சொற்களோடு சேர்த்துச் சொற்ருெடராக்கிக் கூறின் குறித்த பொருள் விளக்கமுறும். இதல்ை மொழி முதன் முதலில் சொற்ருெடரால் அமைவுற்றது என்று மொழியியலறிஞர்கள் கூறுகின்றனர்.
உலகத்தில் வாழும் மக்கள் பல்வேறு இனத்தவராக இருத்தல் போல, மொழிகளும் பல்வேறு இனத்தனவாக உள் ளன. வேர்ச்சொற்களின் உறவையும் இலக்கண ஒற்று மையையும் கொண்டு உலகத்திலுள்ள மொழிகளை மொழியிய லார் பல இனங்களாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் இந்துஐரோப்பிய மொழியினம், செமிட்டிக் மொழியினம், சிதியன் மொழியினம், சீன மொழியினம், திராவிட மொழியினம் என்பவை முக்கியமானவை. நம்முடைய தமிழ் மொழி.
- விரிவை மொழியியல் நூல்களில் கண்டு கொள்க.