பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 493;

தமிழ் மொழி பண்டைக் காலத்தில் கன்னியா குமரிக் கடலுக்குத் தெற்கே இருந்த நாடுகளிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் அகத்திய முனிவர் முதலிய பெரும் புலவர்களின் துணைகொண்டு பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைச் செம்மைப் படுத்தினர். அதனுல் தமிழ்மொழி செந். தமிழ்’ என்னும் சிறப்பினே அடைந்தது. அகத்திய முனிவர் செய்த இலக்கணம் அகத்தியம் என்பது; அஃது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக இருந்தது. அது மூன்று சங்கத்தார்களுக்கும் இலக்கணமாயமைந்து பல புலவர்களாலும் பெரிதும் போற்றப்பட்டு. முதனூலாகவும் எண்ணப்பட்டு வந்தது. முத்தமிழ் இலக்கணங்களையும் இந்நாட்டில் பரவச்செய்த மேம்பாடுபற்றியே. பல மதத்தினரும் அகத்தியரைச் சிறந்த தமிழாசிரியராகப் பாராட்டி இருக்கின்றனர். என்று முள தென்றமிழ் இயம்பி இசைகொண்டவன்', தமிழெனும் அளப்ப்ருஞ் சலதி தந்தவன்” என்று பின்னுல் வந்த கம்பநரீடரும் அவரைப் பாராட்டியுள்ளார். அகத்தியரைப்போலவே பல புலவர்கள் செய்யுட்களே இயற்றினர். அவற்ருல் செந்தமிழ் வளர்வ தாயிற்று. செந்தமிழின் வளத்தைச் சங்க இலக்கியங்களால் அறியலாகும். பல நூற்ருண்டுகட்குப் பிறகு ஒவ்வொரு தமிழுக்கும் தனித்தனியாக இலக்கணங்களை எழுதலாயினர். அவற்றுள் தொல்காப்பியம்’ ஒன்றே இன்று நம்மிடையே முழு நூலாக உள்ளது; ஏனையவை யாவும் அழிந்து பட்டன. தொல் காப்பியம் ஒரு சிறந்த இயற்றமிழ் இலக்கணம்; அஃது இடைச்சங்க காலத்திலிருந்து இன்றுவரை நம்மிடம் பயின்று வருகின்றது. அதன் பின்னர்த் தோன்றிய இலக்கணங்களுள் 12-ஆம் நூற்ருண்டில் தோன்றிய நன்னூல்.’ ஒன்றே வழக்கில் உள் ளது.

இயற்றமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகைப்படும். பொருத்த இலக்கணத்தையும் பிரபந்த இலக்கணத்தையும் இயற்றமிழ்

2 கம்பரா. ஆரணியகா. அகத். செய்-47. * கம்பரா. பாலகா. தாடகை வதை செய்-34.