பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 495

இலக்கணத்தின் இன்றியமையாமை : டாக்டர் ஸ்வீட் என்ற ஆங்கிலப் பேராசிரியர் இலக்கணம் மொழியின் பல்வேறு கூறுகளைக் கூறும் பகுதியெனக் குறிப்பிடுகின்றர். இலக்கணம் என்பது மொழியின் இயக்கத்தைப் பல விதிகளாகப் பாகுபடுத்திக் கூறும் நூல். தமிழில் நூல்' என்ற சொல்லே இலக்கணத்தைக் குறிக்கும். தமிழ் மொழியைப் பொருத்தவரை ஆழ்ந்த இலக்கண அறிவு இருந்தால்தான் இலக்கியத்தின் பல நுட்பமான கருத்துக்களைக் கூர்ந்து உணர்ந்து சுவைக்க முடியும். இலக்கணம் மொழியின் கண்ணுகும். இலக்கணம் கற்றலின் பயன்,

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்

-மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்”*

என்ற வெண்பாவால் போதரும்: இலக்கணத்தின் இன்றி. யமையாமையும் இதனுல் புலப்படும்.

இலக்கணம் பயிற்றுவதன் நோக்கங்கள்: உடற்கூற்றிய லறிவு மருத்துவத்துறை வல்லாருக்குப் பயன்படுதல் போல இலக்கண அறிவு மொழியைக் கற்பிப்பாருக்குப் பெருந்துணையாக இருக்கும். ஏனெனில், உடற்கூற்றியலறிவு உடலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுவதுபோல, இலக்கண அறிவு மொழியின் அமைப்பை ஓரளவு அறிந்துகொள்ளவும் அதைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் துணை செய்கின்றது. மொழியியலறிவுக்கு இலக்கணமே இன்றியமையாத அடிப்படையாகும். பேச்சு வழக்கில் காணப்படும் மொழி மரபுகளே நமக்குத் தெற்றென எடுத்துக் காட்டுவதற்கு அது பயன்படுகின்றது. பேச்சிலும் எழுத்திலும் சிவஞான முனிவர் : தொல்காப்பிய முதற்சூத்திர * بببببب விருத்தி. பக்கம் 20.