பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 27°

கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்று அப்பயிற்சியிலும் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். இன்றுள்ள தாய்மொழியtசிரியர்கள் பட்டதாரிகளை விட மொழியறிவு பெற்றிருந்தாலும், பட்டதாரிகளுக்கிருக்கும் வாய்ப்புக்கள் இவர் களுக்கில்லே. பட்டதாரிகள் பெறும் பயிற்சி முறையை இவர்கள் பெற முடிவதில்லை. கல்வித்துறைபற்றிய பல புதிய கருத்துக்களை ஆங்கில நூல்களிலிருந்து தெரிந்து, கொள்ளும் வாய்ப்புக்களும் இவர்களுக்கில்லே. கற்பிக்கும் முறைபற்றியும், கல்வித்துறையில் பல் வேறு பொருள்களைப் பற்றியும் தாய்மொழியில் நூல்கள் மிகக் குறைவு ; நல்ல நூல்கள் இல்லை யென்றே துணிந்து கூறி விடலாம். தாய் மொழியில் இத்தகைய நூல்கள் பெருகும்வர்ை தாய் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில அறிவு: பெற்றுப் பட்டதாரிகளாக இருத்தல் இன்றியமையாததாகும். பட்டதாரிகளாக இல்லாவிட்டால் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக இயல் போன்ற பாடங்களேக் கற்பிக்கும் ஆசிரியர்களைப்போல் தாய்மொழியாசிரியர்கள் பல புதிய கருத்துக்களே அறிந்துகொள்வதற்கு வாய்ப்புக்கள் இரா.ே ஏனேயோர் புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதைப் போல் இவர்கள் தெரிந்து கொள்ள இயலாது.

ஏனேய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றுள்ள கல்வியறிவு, பயிற்றும் முறை ஆகியவற்றைப் போல்: தாய்மொழியாசிரியர்களும் பெற்றிருந்தால் இவர்களிடம் வேரூன்றியிருக்கும் தாழ்வுணர்ச்சி ஓரளவு நன்ருகவே நீங்கிவிடும். அவ்வாசிரியர்களேப் போலவே இவர்களும் பள்ளியில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து. கொள்ளவேண்டும். இவர்கள் குடிமைப் பயிற்சி, சாரணர் படை, செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுலா ஆகியவற்றிலெல்லாம் பங்கு கொள்ளவேண்டும். பலதிறப்பட்ட பொருள்களைப் பற்றிப்பேசவும், உரையாடவும் வல்லவர்களாகத் திகழ வேண்டும். தாவர இயல், நில இயல், பிராணி இயல், அரசியல் நூல், பெளதிக இயல், வேதியல், வானியல் போன்ற துறைகள்பற்றி யெல்லாம் மாணவர்களிடம்