பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 தமிழ் பயிற்றும் முறை

நேரிடும் பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கு இலக்கண அறிவு துணையாக உள்ளது. செய்யுட்களைப் பிரித்துப் பொருள் காணவும், சிலேடைப் பொருள் கண்டு மகிழவும், செய்யுட்களில் வரும் இலக்கண அமைதிகள், அரிய சொல்லாட்சிகள் முதலியவற்றை அறியவும், அவற்றில் காணப்பெறும் இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் போன்ற அரிய கருத்துக்களே அறித்து இலக்கிய இன்பத்தை நுகரவும் இலக்கண அறிவு பெரிதும் பயன்படுகின்றது. இவற்றின் பொருட்டன்றி இலக்கணத்தின் உண்மை இயல். புகளைக் கண்டறிவதற்கே சில இலக்கண ஆசிரியர்கள் அதனே ஆழ்ந்து பயிலுகின்றனர். இலக்கணப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதில் காணும் விதிகளே அப்பாடத்துடன் மட்டும் கற்பித்து நிறுத்தி விடாது மொழிப்பாடத்தோடும் கட்டுரையோடும் பொருத்திக் கற்பித்தால் அவ்விதி. களும் அவ்ற்றின் ஆட்சியும் மாளுக்கர்கட்கு நன்ருக விளக்கம் அடைந்து நடைமுறையிலும் நன்கு பயன்படும்.

இலக்கணத்தை ஆசிரியர் கற்கும் நோக்கம் வேறு; மாளுக்கர் கற்கும் நோக்கம் வேறு. ஆசிரியர் மொழியினே நன்கு அறிந்து கொண்டபிறகு இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கென்றே கற்கின்ருர்; மாணுக்கர்கள் மொழி யைக் கற்கும் நிலையில் சொற்ருெடர் அமைப்பு, சொல் லாட்சி முறை, வழக்கு இயல்புகள் முதலியவற்றை அறிந்து கொண்டு மொழிகற்றலில் துணையாக இருப்பதற்கென்றே கற்கின்றனர். எனவே, இலக்கணம் கற்பதில் ஆசிரியரின் நோக்கம் அறிவியல் போக்கை ஒட்டியது: மாளுக்கரின் நோக்கம் பயனே அடிப்படையாகக் கொண்டது. ஆசிரியருக்கு இலக்கண அறிவு கற்பித்தல் துறையில் புதிதான கருத்தேற்றங்களைத் தரும்; மாணுக்கர்கட்கு மொழியின் அமைப்பை நன்கு அறிந்துகொள்ள வாய்ப்புக்களே நல்கும். கருவிலே திருவமைந்தவர்கட்குத் தான் ஆழ்ந்த மொழியறிவு ஏற்படும் என்பது ஓரளவு உண்மையென்ருலும் ஒரு மொழியின் இயல்புகளைப்பற்றிய அறிவு அம்மொழி. யினைச் செம்மையாகக் கற்பதற்குக் கட்டாயம் துணைசெய்யும். எனவே, மொழியியல்புகளைத் தெரிவிக்கும்