பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 தமிழ் பயிற்றும் முறை

அங்கு இலக்கண விதிகளே எம்முறையிலும் கற்பிக்க வேண்டிய அவசியமில்லே மானுக்கர்கட்கு மொழியில் சிறிதளவு தேர்ச்சி ஏற்படுவதற்குமுன் இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்பிப்பது வீண். இலக்கியம் கண்ட பின்னரல்லவோ இலக்கணம் ? ஆதலின் மொழியில் தேர்ச்சிபெருதிருக்கும் மாளுக்கர்கட்கு இலக்கணம் கற்பித்தலால் பயனில்லை. சிறிதளவு மொழிப் பயிற்சி ஏற்பட்ட பின்னர் இலக்கணத்தைப் பாடப்புத்தகங்களைக் கொண்டு கற்பிக்கும்பொழுது நடைமுறையை யொட்டிக் கற்பிக்கலாம். தொடக்க நிலையில் தூய்மையான பேச்சைக் கேட்பதாலும், நல்ல நூல்களேப் படிப்பதாலும் மட்டுமே மொழித்திறமை அடையமுடியும். சொற்ருெடர்களின் அமைப்பி லுைம் ஒசையிலுைம் அவை பிழையா, சரியா என்று அறியமுடியுமே யன்றி, தனியான இலக்கண அறிவால் இளம் மானக்கர்கள் மொழியின் நயத்தை அறிய முடியா. எனவே, தொடக்க நிலையில் இலக்கணம் கற்பிப். பதைக் காட்டிலும் அதிகமாகப் படிக்கவும் பிறர் பேசக் கேட்கவும் வாய்ப்புக்களே நல்குவதே சிறந்த முறையாகும்.

மாளுக்கர்களில் பெரும்பான்மையோருடைய வீடுகளில் பேசப்பெறும் மொழி இலக்கண வரம்புக் குட்பட்டதன்று. பெரும்பாலும் வீடுகளில் கொச்சை மொழியே மலிந்திருக்கும். இக் கொச்சை மொழியை இலக்கணம் கறபித்தலால் தவிர்க்க முடியும் என்று எண்ணுவது தவறு. சொற்ருெடர் அமைப்பு முறைகளே விளக்குவதனுலோ, சொற்ருெடர்களே இணைத்தோ அல்லது துண்டித்தோ காட்டுவதனுலோ மாளுக்கர்கட்கு மொழியறிவு ஏற்பட்டுவிடாது. வளர்ந்த வர்கள் ஒருகால் இம் முறைகளே விரும்பிக் கற்கலாம். குழந்தைகட்கு இம்முறைகள் கட்டாயம் வெறுப்புத் தட்டும். பள்ளிகளில் நடைபெறும் வாய்மொழிப் பயிற்சிகள் மூல மாகவும் பல புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவும் படிப் படியாக இக்கொச்சைமொழிப் பழக்கத்தை நீக்கலாம். நல்ல

இலக்கியங் கண்டதற் கிலக்கனம் இயம்பன்: என்பது நன்னூல் (நூற்பா.-14).