பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 499

பேச்சுப்பழக்கத்தை மாணுக்கர்கள் மேற்கொள்ளும்பொழுது தான் மொழியின் அமைப்பை அறிய நல்ல வாய்ப்பு ஏற்படும். பேசுவதில் போதுமான பட்டறிவு ஏற்படும்பொழுது மொழி யின் அமைப்பு நன்கு புலனுகும். சொற்ருெடரமைப்பு, தினே, பால், எண், இடம் முதலிய உறுப்பிலக்கண விதிகள் முதலியவற்றை மாணுக்கர்கள் திருத்தமாகப் பேசுவதாலும், புத்தகங்களே யும் பிறவற்றையும் படிப்பதாலும் நன்கு அறிந்துகொள்வர்.

இளம் மானுக்க்ர்கள் ஒப்புடைமையாலும் (Analogy). போலச் செய்தலாலும் (imitation) மொழியை நன்கு அறி. கின்றனர். இவற்ருல் பல சொற்ருெடர்கள் அவர்கள். மூளையில் பதிந்து ஒழுங்குபெறுகின்றன. இவ்வாறு இயல்பாக அமையும் ஒழுங்கு முறையை மாணுக்கர்கள்,மருளும்அல்லது ஆசிரியர்கள்ால் மருள வைக்கப்பெறும்-இலக் கணப்பாடத்தில் சிதைக்க வேண்டியதில்லை. அண்ணன் வந்தான்’ என்றும், அது வந்தது’ என்றும் பல சொற்ருெடர்களைப் பல நாள் கூறக்கேட்டுப் பயின்று ஆண்பால் வினேமுற்றையும், ஒன்றன் பால் வினமுற்றையும் இன்னவை என்று அறிந்த இளம் மானுக்கர்கள் அவற்றையே-தமக்கு முன்னர்த் தெரிந்தவற்றையே-பல ஆண்டுகள் கழிந்த பின்னர் இலக்கணம் என்னும் பெயரால் ஆண்டால் விகுதி 'ஆன்’ எனவும், ஒன்றன் பால் விகுதி 'து' எனவும்: முயன்று இடர்ப்பட்டுக் கற்பதைக் காண்கின்ருேம்.

தொடக்கநிலைப் பள்ளிகளில் இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்பிக்காவிட்டாலும் ஆசிரியர்கள் பல்வேறு விதமான மொழிப் பயிற்சிகளைக் கையாண்டு மாணுக்கர்களின் மொழி அறிவை வளர்க்க வேண்டும். இவ்வாறு தரப்பெறும் பன்முறை மொழிப்பயிற்சியால்தான் இளம் மாணுக்கர்களின் பேச்சிலும் எழுத்திலும் காணப்பெறும் வழுக்களை எளிதில் படிப்படியாக நீக்கி நல்ல மொழியறிவினே உண்டாக்க முடியும். இதனுல் ஆசிரியருக்கு அதிகப் பொறுப்பும் வேலேயும் ஏற்படும். இளம் மாணுக்கரின் மொழியறிவு, பட்டறிவு, மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற