பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50B தமிழ் பயிற்றும் முறை

அளிப்பதில்லை. இலக்கணத்தை ஒரு கருவியாக மட்டிலும் கருதாமல் இலக்கண அ வையே முடிந்த குறிக்கோளும் பயனும் என்று எண்ணி இளம் மாணுக்கர் களே வற்புறுத்திக் கற்பிக்கின்றனர். தனித்தனிப்பயிற்சி முறைகளே இலக். கணப் படிப்பில் புகுத்துவதில்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற முறையில் இலக்கணத்தைக் கற்பித்து மாணுக்கர்கட்குச் சலிப்பை உண்டாக்கி விடுகின்றனர். கற்பிக்கும் ஆசிரியர்களும் இலக்கணத்தில் பற்றும் விருப்பமும் கொண்டு. உற்சாகமாகக் கற்பிக்காமல் வீேண் கடனுக்கு’ என்றே கற்பிப்பதால், கற்கும் மானுக்கர்களும் அதை விரும்பிக் கற்பதில்லை.

இலக்கணத்தைத் தொடங்கும் பருவமும் பயிற்றும் பொருளும் : தொடக்கநிலைப் பள்ளிகளில் முதல் இரண்டு வகுப்புக் களில் இலக்கணத்தைப்பற்றிய எண்ணமே ஆசிரியரிடம் எழவேண்டிய இன்றியமையாமை இல்லை. மேற்கூறியவாறு வாய்மொழிப் பயிற்சிகளாலும் பிறமொழிப் பயிற்சிகளாலும் மொழித்திறனே எய்துவிக்கலாம், மூன்ரும் வகுப்பில் இலக் கணத்தைப்பற்றி ஆசிரியர் ஒரளவு சிந்திக்கலாம் ; மாளுக்கர்கட்கு அதைப்பற்றி நேர் முறையிலோ நேரல் முறையிலோ உணர்த்த வேண்டிய இன்றியமையாமை இல்லை. பாடப்புத்தகங்களைப் பயிலும்பொழுது மொழிப் பயிற்சிகளாக அப் புத்தகங்களிலிருக்கும் சொற்ருெடர்களிலிருந்து பெயர்ச் சொல். வினேச்சொற்களைப் பிரித்து எடுத்துச் சொல்லவும், அவற்றின் ஒருமை பன்மை வேறுபாடுகளைக் காட்டவும் பழகிக் கொண்டால் போதுமானது புதியமுறைப்படி மொழியைக்கற்றலில் தமிழ் நெடுங்கணக்கை வரிசையாகக் கற்கும் வாய்ப்பு இராததால், அதை மூன்ரும் வகுப்பின் தொடக்கத்தில் வரிசை முறைப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.* நான் காம் வகுப்பில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆய்தவெழுத்து, குறில்,

  • புதிய பாடத்திட்டப்படி (1958) முதல் வகுப்பிலேயே மாளுக்கர்கள் தமிழ் நெடுங்கணக்கினை வரிசை முறைப்படி அறிதல் வேண்டும்.