பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

每04 தமிழ் பயிற்றும் முறை

வரைப்படங்களை ஆசிரியர்கள் தம் யுக்திக்கும் அறிவிற்கும் ஏற்றவாறு இடங்களை யொட்டி ஆயத்தம் செய்து கொள்ள. லாம்.

சில இலக்கணப் பயிற்சிகள் : மேற்கூறிய முறையில் மாணுக்கர்கள் கற்ற இலக்கண அறிவை நன்கு வலியுறுத்து. வதற்கு ஆசிரியர் புதிய முறைகளில் பலவகைப் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இவ்விதப் பயிற்சிகளே மாளுக்கர்களின் பாடப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் ; ஆசிரியர் களும் ஆழ்ந்து சிந்தித்து மானுக்கரின் பட்டறிவிற்கேற்ற பயிற்சிகளே ஆயத்தம் செய்யவேண்டும். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

வரிசை மாறியுள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்; எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் கண்டறிதல்; பெயர், வினைச் சொற்களைப் பொறுக்கி யெடுத்தல்; திணை பால் எண் இடம்-இவற்றிற்கு ஏற்றவாறு எழுவாயைக் கொடுத்துப் பயனிலையையும், பயனிலையைக் கொடுத்து எழுவாயையும் அமைத்து எழுதச் செய்தல்; வினைச் சொற்களில் காலங்களையறியச் செய்தல்; பெயரடை (Adjective) வினையடை (Adverb) களைக் கண்டறிதல்; வாக்கிய மாற்றத்தை யொட்டிய பல்வேறு பயிற்சிகள்; பிழையான சொற்ருெடர்களேத் திருத்தியமைத்தல் முதலியவை.

நடுநிலைப் பள்ளி வகுப்புக்களில் இலக்கணப்பாடம்: நடுதிலைப்பள்ளி வகுப்பிற்கு வரும் மாளுக்கர்கள் ஓரளவு நன்கு பேசவும் எழுதவும் பழகியிருப்பர். ஒருசில விதிகளுக் கிணங்கப் பேசவும் எழுதவும் வேண்டுமென்பதை அறிவர். படிப்படியாகச் சொல்வகைகளையும் ஒவ்வொரு வகைச் சொல்லும் ஒவ்வொரு விதமாகப் பயன்படினும் எல்லாவகைச் சொற்களும் பல்வேறு வகைகளில் ஒன்ருேடொன்று தொடர்புடையன என்பதையும் அறிவர். இந்நிலையில் ஓரளவு இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்பிக்க முயலலாம். இவ்வகுப்புக்களில் மானுக்கர்கள் மாத்திரை, குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் போன்ற எழுத்துவகைகளையும்; இடுகுறி காரணப் பெயர்கள், சுட்டு,