பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

至28 தமிழ் பயிற்றும் முறை

உரையாடும் அறிவுடையவர்களாக இருந்தால், மாணுக்கர் களிடம் நல்ல செல்வாக்குடன் திகழலாம் ; தாம் கற்பிக்கும் நூல்களில் அவ்வகைக் கருத்துக்கள் வரும் இடங்களே நன்கு விளக்கலாம். இன்றையப் பாடத்திட்டத்தில் பல துறைக் கருத்துக்கள் வரும்படி பாடங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன; அகன்ற படிப்புக்குரிய நூல்கள் பல்வேறு பொருள்களைப் பற்றியனவாக வெளி வருகின்றன. இவற்றைக் கற்பிக்க வேண்டிய நிலையிலுள்ள வர்கள் ஓரளவு பள்ளியிறுதித் தேர்வு வரையிலாவது பொதுக் கல்வியும் பல்கலைக் கழகப் படிப்பும் பட்டமும் பெற்றிருந்தால்தான் சிறப்புடனும் திறமையுடனும் பணியாற்ற முடியும்.

தாய்மொழி யாசிரியர்கள் இதுகாறும் இலக்கிய இன்பம் அடைவதே கல்வியின் நோக்கம் என்று எண்ணி யிருந்தனர். அந்த நோக்கத்தை அவர்கள் சிறிது மாற்றிக் கொள்ள வேண்டும். மொழியைக் கற்பது இலக்கியம் படித்து நுகர்வதற்காக மட்டுப் அன்று என்பதை உணர வேண்டும். கல்வி மனிதனே முழு வளர்ச்சி அடையச் செய்யும் சாதனம் என்பதையும், சிறந்த குடிமகளுகச் செய்வதற்குத் துணைபுரிவதும் அதுவே என்பது போன்ற நோக்கங்களையும் அவர்கள் நினைவில் இருத்தவேண்டும். உளவியல் கற்று, குழந்தையின் மனத்தைப்பற்றிய நவீன கருத்துக்களை அறிந்து கொள்ளவேண்டும். பல கல்வி அறிஞர்கள் தம் அனுபவத்தில் கண்டறிந்த முறைகளை யெல்லாம் தெரிந்து அவற்றைத் தம் மொழிப் பயிற்றலில் எவ்வெவ்வாறு கையாளலாம் என்பதைச் சிந்தித்தல் வேண் டும். செவியின் வாயிலாகப் பயிற்றுவதுடன் ஏனைய புலன்கள் வாயிலாகவும் உணர்த்தினுல் மாணுக்கர்கள் பாடத்தை நன்கு உணர்வர் என்பதை அறிந்து அதற்கேற்ற முறைகளைக் கையாளவேண்டும். படங்கள், நாட்டுப்படங்கள், ஓவியங்கள் முதலியவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஏனேய ஆசிரியர்களைப்போல் மாணுக்கர்களுக்குப் பாடத்தில் எவ்வெவ்வாறு சுவையூட்டி ஆர்வத்தை எழுப்பலாம் ? எந்தத் துணைக்கருவிகளே மேற்கொண்டால் அவர்கள்