பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 507

தாமரைப் பூவாகலின், இக்கருத்தை ஏற்ற விளுக்களே விடுத்து மாணுக்கரிடமிருந்தே வருவிக்கலாம். இம்மாதிரியே ஏனேய எடுத்துக்காட்டுக்களிலும் முறையே தலே முதலிய அவற்ருேடு தொடர்புடைய சொற்கள் அவற்ருேடு தொடர்புடைய வேறு பொருள்களுக்குப் பெயராகி வருதலே மாளுக்கரிடமிருந்தே வருவித்தல் கூடும். இவ்வாறு “ஒன்றன் பெயர் அதளுேடு தொடர்புடைய வேருெரு பொருளுக்குப் பெயராகி வருவதே ஆகுபெயர் எனப்படும்' என்ற விதியை மாளுக்கர்களையே கண்டறியும்படி செய்யலாம்.

(2) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் தாமரைக் கொடி என்ற முதற் பொருளின் பெயர் அதன் சினையாகிய பூவிற்கு ஆயிற்று என்பதை ஏற்ற விளுக்களைக்கொண்டு மாளுக்கரிடமிருந்தே வருவிக்கலாம். இவ்வாறு முதற்பொருள் சினேப்பொருளுக்கு ஆகிவருவது முதலாகு பெயர்' எனப்படும் என்பதை ஆசிரியர் தெரிவிக்கலாம். இவ்வாறே ஏனேய எடுத்துக்காட்டுக்களிலும் ஏற்ற வினுக்களைக் கொண்டு தலையென்ற சினேப்பெயர் அதனேயுடைய மனிதன் என்ற முதற்பொருளுக்கு ஆகிவருவதால் சினையாகு பெயர்’ என்றும், இந்தியா என்ற இடப்பெயர் இந்தியாவிலுள்ள மனிதர்களைக் குறிப்பதால் இடவாகு பெயர்’ என்றும், காலம் என்னும் காலப் பெயர் மூன்று காலச் செய்திகளுக்குப் பெயராகி வருவதால் கால ஆகுபெயரென்றும், இனிப்பு என்னும் பண்புப் பெயர் இனிமையுள்ள பண்டங்கட்குப் பெயராகி வருவதால் பண்பாகு பெயரென்றும், பொங்கல் என்னும் தொழிற் பெயர் பொங்கலாகிய ஒருவகை உணவிற்குப் பெயராகி வருவதால் தொழிலாகு பெயரென்றும் மாணுக்கரிடமிருந்தே வருவிக்கலாம்; வருவிக்க முடியும். இவ்வாறு, "ஆகுபெயர் முதலாகுபெயர், சினையாகுபெயர், இடவாகுபெயர், காலவாகுபெயர், பண்பாகுபெயர், தொழிலாகு பெயர் எனப் பலவகைப்படும்” என்பதை மாணக்கர்கள் அறியச் செய்யலாம்.

இம்முறையில் ஆகுபெயர்பற்றியும் அதன் வகைகள்பற்றியும் அறிந்தவற்றைக் கீழ்க்காணும் சில எடுத்துக்