பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

むG& தமிழ் பயிற்றும் முறை

காட்டுக்களில் பொருத்திக் கற்கச்செய்தால் புதிதாகக் கற்றவை பின்னும் வலியுற்றுக் கருத்தில் நன்கு பதியும்.

(அ) கனகாம்பரம் சூடினுள்.

(ஆ) புளி முளைத்தது.

(இ) பேச்சுப் போட்டியில் அழகப்பா பயிற்சிக் கல்லூரி

வெற்றியடைந்தது.

(ஈ) கார் எப்பொழுது அறுவடையாகும்?

(உ) வீட்டுக்கு வெள்ளை யடித்தான்.

(ஊ) பொரியல் நன்ருய் இருந்தது.

இந்த எடுத்துக்காட்டுக்களை ஆசிரியர் தருவதைவிட மாளுக்கரிடமிருந்தே வருவித்தல் சாலச் சிறந்தது; ஆசிரியர் கூறினும் இழுக்கொன்றுமில்லை. பொருத்திக் கற்றல்தான் மிகவும் முக்கியமானது. .

உயர்நிலப் பள்ளி வகுப்புக்களில் இலக்கணப்பாடம் : உயர் நிலைப் பள்ளி வகுப்பிற்கு வரும் ம்ாணுக்கர்கள் ஒரளவு நல்ல மொழியறிவினை அடைந்து சில இலக்கியங்களைத் துய்க்கும் ஆற்றலையும் பெற்றிருப்பர். அவர்கள் இலக்கண அறிவின் இன்றியமையாமையை ஓரளவு நன்கு அறிவர். இங்கும் இலக்கணத்தைத் தனிப்பாடமாகவே கற்பிக்கலாம். இந் நில மானுக்கர்களுக்கு இலக்கணத்தை ஒப்படைப்பு முறையில் கற்பிப்பது ஏற்றது என்று முறை வல்லார் கூறுகின் றனர்.

நடுநிலைப் பள்ளி வகுப்புக்களில் கற்ற இலக்கணத்தை இங்கு இன்னும் உறுதியடையச் செய்வதுடன் அப்பகுதிகளே இன்னும் சற்று விரிவாகவும் கற்பர். ஆகுபெயர், வேற்றுமை, பொதுப் பெயர்கள், குற்றியலுகரம், வினேமுற்று, எச்சம், வடமொழியாக்கம், புணர்ச்சி, யாப்பு, அணி முதலியவற்றைப்பற்றிச் சற்று விரிவாகவும் உணர்வர் ; இவற்றைப்பற்றி அதிகச் செய்திகள் கற்பிக்கப்பெறும்.

  • பக்கம்-141. டால்ட்டன் திட்டம்.