பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 509

மற்றும் இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை சற்று விரிவாகக் கற்பிக்கப்பெறும். பொருள் இலக்கணம் சிறிது கற்பிக்கப்பெறும். அகப்பொருள், புறப்பொருள் பாகுபாடுகளையும் முதல், கரு, உரிப்பொருள் பிரிவுகளையும், புறத்திணை களேப்பற்றியும் சுருக்கமாக மாணுக்கர் இவ் வகுப்புக்களில் அறிந்து கொள்வர். -

பயிற்று முறை : இங்கும் கூடியவரை விதிவருவித்தல் முறையிலேயே கற்பிக்கவேண்டும். எல்லாப் பகுதிகளையும் இம் முறையில் கற்பித்தல் இயலாது. சில பகுதிகளே விதி விளக்கு முறையிலும் கற்பிக்க நேரிடும். இவ்வாறு கற்பித்தவற்றிற்கு மேலும் சில எடுத்துக்காட்டுக்களே மாளுக்கர்கள் களிடமிருந்து வருவித்து கற்பித்தவற்றை வலியுறச் செய்யவேண்டும். எந்த முறையில் கற்பித்தாலும் வி-ைவிடை முறையைத் தக்கவாறு பயன்படுத்தினுல்தான்"மாளுக்கர் உற்சாகமாகக் கற்பர். எடுத்துக்காட்டாக, ஐந்தாம் படிவ மாணுக்கர்கட்கு நான்காம் வேற்றுமைப் பொருள்களைக் கற்பிப்பதில் விதிவருவித்தல் முறை, விதிவிளக்கு முறைகளே எவ்வாறு கையாளலாம் என்பதைப் பார்ப்போம்.

நோக்கம் : நான்காம் வேற்றுமைப் பொருள்களை விளக்

குதல்.

அடியிற்கண்ட சொற்ருெடர்களைக் கரும்பலகையில்

எழுதி ஒரு சில மாணுக்கர்களே ஒவ்வொருவராக வாய் விட்டுப் படிக்கும்படி செய்யவும்.

(அ) எளியவர்க்கு அன்னம் இட்டான். (ஆ) பாம்புக்குப் பகை கருடன். (இ) இராமனுக்கு நண்பன் சுக்கிரீவன். (ஈ) அரசருக்கு முடி உரியது. (உ) காப்புக்குப் பொன் கொடுத்தான். (ஊ) கூலிக்கு வேலை செய்தான். (எ) இராமனுக்குத் தம்பி இலக்குவன்.