பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 海盖盘

உண்டாக்கும்படி செய்யலாம். பிறகு ஆசிரியர் நினைவில் வைத்துக்கொள்வதற்கு எளிதாக இருக்கும் இவ்விதியை இலக்கண நூலில் நூற்பாவாகச் செய்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறி,

" நான்கா வதற்குரு பாகுங் குவ்வே; கொடை.பகை நேர்ச்சி தகவது ஆதல் பொருட்டுமுறை ஆதியின் இதற்கிதெனல் பொருளே’

(நேர்ச்சி-நட்பு; தகவு-தகுதி; அது ஆதல்-காரணமே காரியமாக அமைதல். பொன்னே காப்பாதலை அறிக.)

என்பதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டி அதைத் தம் இலக்கணக் குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளுமாறு செய்யலாம்.

சில மாணுக்கர்கள் உயர்திணைக்கண் முறைப்பொருளில் நான்காம் வேற்றுமை யுருபீன்றி, ஆரும் வேற்றுமை யுருபு சேர்த்து எனது மகன்’ என்று எழுதுவதைத் தகுதியன்று என்பதனே இவ்விடத்தில் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக் கலாம். அது என்னும் உருபு அஃறிணையினின்று உயர் திண்யில் வருதல் அமையாது என்பதையும், அது முறைப் பொருளில் வருதல் இல்லை என்பதையும் விளக்கிக் காட்டுவதற்கு இவ்விடம் சிறந்தது. .

இவ்வாறு நான்காம் வேற்றுமை உருபுபற்றியும் அதன் பொருள்கள் பற்றியும் அறிந்தவற்றை அடியிற்காணும் சில எடுத்துக்காட்டுக்களில் பொருத்திக் கற்கச் செய்தால் புதிதாகக் கற்ற பொருள் மனத்தில் நன்கு வலியுறும். இவ்வாறு விதியை எடுத்துக்காட்டுக்களில் பொருத்திக் கற்றஆலத்தான் விதிவிளக்கு முறை” என்று முறை வல்லார் குறிப்பிடுவர்.

நன்னுரல்-நூற்பா-298.