பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎擅4 தமிழ் பயிற்றும் முறை

மையைத் தமிழாசிரியர்கள் நினேவில் வைத்து இலக்கணம் கற்பிக்கவேண்டும்.

மொழி வளர்ச்சி : மொழி யறிவு பிறிதொரு பயனுக்குக் கருவியாகுமேயன்றி அதுதானே பயனுகாது. மொழியறிவே இன்பம் எனக்கொண்டு அதன் கண் இன்பங்காண்பவரும் உளர். தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என்று இந்நாட்டு அறிஞர் மட்டுமல்ல, மேட்ைடு அறிஞர்களும் சிறப்பித்துள்ளனர். தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிக்குத் தலைமையும் அவற்றினும் மிக்கவே தகவுடைமையுமுள்ள மொழியே உயர்மொழி. இவ்விலக். கனத்தைக்கொண்டு தமிழ் மொழியை ஆராய்ந்தால், தெலுங்கு முதலிய ஏனேய திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடையதாக இருப்பது தெரியவரும் என வே, அதை உயர் மொழி என்று கூறுவதில் தவறு இல்லை. ஒரு மொழி தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்லதாக இருந்தால் அதனேத் தனி மொழி என்று கூறலாம். தமிழ் மொழி பிறமொழிகளின் துணை சிறிதுமின்றித் தனித்து இயங்கவல்லது என்பதை இந்திய நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது. ஆதலின், தமிழ் தனி மொழி என்பது எவரும் அறிந்த உண்மையே. திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி"யாம் என்பது இலக்கணம். இம். மொழியியலிலக்கணம் தமிழ் மொழியின்கண் அமைந். திருத்தல் வெள்ளிடை மலே. இடர்ப்பட்ட சொல் முடிபு. களும் பொருள் முடிபுகளுமின் றிச் சொல்லுகின்றவர் கருதிய பொருளைக் கேட்பவர் தெள்ளிதின் உணரவல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலைத் தான் 'திருந்திய பண்பு' என்று அறிஞர் சுட்டுவர். இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் எளிதில் உணரற்பாலது.

நாட்டின் நாகரிக வளர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டு மொழிக்கும் நாகரிக நலம் விளைவித்தல் வேண்டும்.