பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 16 தமிழ் பயிற்றும் முறை

தோதி யிருக்கக்கூடும் என்று கருதலாம். ஆளுல், ஆசிரியர் சிவஞான முனிவர் இவ்வாறு விதந்தோதியதற்குக் கூறும் காரணம் அமையு மாறில்லை. இச் சொற்களேத் நாம் கடன் வாங்கிய சொற்கள் (Loam-words) என்று குறிப்போம். இவற்றைப்பற்றிய ஒரு சில செய்திகளைத் தமிழ் மொழி. யாசிரியர்கள் அறிதல் இன்றியமையாதது.

கடன் வாங்கிய சொற்கள் : மொழியியலார் இவற்றை மொழி நூற்கலையின் மைல்கற்கள்’ என்று கூறுகின்றனர்; பெரும்பான்மையான சொற்கள் மொழி யடைந்த ம்ாற். றத்தைக் கிட்டத்தட்ட காலவரை யறையுடன் அறிவதற்குத் துணைபுரிகின்றன. இவை பொதுவாக நாட்டு வரலாற். றையும் கூறும் மைல் கற்கள் என்றும் கருதலாம். ஏனெனில், அவை நாகரிகம் வளர்ந்த வரலாற்றையும் புதியன புனேயப்பெற்ற வரலாற்றையும் உணர்த்துவனவாக உள்ளன. நாட்டுவரலாற்று நூல்கள் எனக் கூறப்பெறுபவை மன்னர்களும் மாதாக்கோவில் தலைவர்களும் மாண்ட கதையினைத் நாள் தவருமல் கூற, இச் சொற்கள் உள்நாடுகளின் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளேப்பற்றிய பல உயர்ந்த தகவல்களேத் தருகின்றன.

  • நன்னூல் நூற். 270 உரை: 'வடக்கு ஒரு திசை யன்ருே திசைச் சொல்லன்றி வடசொல்லென வேறு கூறுவ தென்னையெனின் : தமிழ் நாட்டிற்கு வடதிசைக்கட் பதினெண் மொழிகளுள் ஆரிய முதலிய பல மொழியு முள வேனுந் தென்றமிழ்க் கெதிரியது கடவுட் சொல்லாகிய ஆரிய மொன்றுமே என்பது தோன்ற அவற்றுட்டமிழ் நடை பெற்றதை வடசொல்லென்றும், ஏனையவற்றுட்டமிழ் நடை பெற்றதைத் திசைச் சொல்லென்றும் சான்றேரால் நியமிக்கப் பட்டன வென்க. அன்றியும், ஆரியச்சொல் எல்லாத் தேயத் திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொதுவாகலான் அவ்வாரியச்சொற் றமிழ்நடை பெற்றதைத் திசைச் சொல் லென்றல் கூடாதெனக் கோடலுமாம். அங்ங்னமாயின், வட சொல்லென்ற தென்னையெனின் ஆண்டுப் பயிற்சி மிகுதி பற்றி யெனக்கொள்க."