பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 5星9

மொழியாக வழங்க வேண்டியதாயிற்று. வாணிகத்தின் பொருட்டும், பிற காரணங்களின் பொருட்டும் அவர்களுடன் பழகிய தமிழரும் அம்மொழியைக் கற்றனர். ஆகவே, ஏறக் குறைய முந்நூறு ஆண்டுகளாகப் பொதுமொழியாக வழங்கி வந்த போர்த்துக்கீசியச் சொற்கள் மட்டிலும் சில தமிழில் கலந்துள்ளன. எடுத்துக்காட்டுக்களாக,

அன்னசி, கொய்யா, வாத்து, பீங்கான், கோப்பை, கமிசு, சப்பாத்து, அரக்கு, விசுக்கோத்து, பொத்தான், மேசை புனல், கடுதாசி, பேணு, சிமிட்டி, பீப்பா, மேஸ்தரி, ஆயா, பாதிரி, பட்டாளம், துருப்பு, சிப்பாய், துப்பாக்கி, நங் கூரம், சாவி, ஏலம், ரசீது, ஆசுபத்திரி, இஸ்கூல், விவிலியம், பட்டாசு, சன்னல். '

முதலியவற்றைப் போர்த்துக்கீசியத் திசைக்சொற்களாகக் கருதலாம். இப்போது வணிகத்துறையில் ஆங்கிலம் அதிகம் பயின்று வருவதன் காரணமாகப் பல ஆங்கிலச் சொற்கள் தமிழ் மொழியுடன் கலந்து பேச்சு வழக்கில் பயின்று வருகின்றன. எடுத்துக்காட்டுக்களாக,

பெல்டு, பென்ஸில், ஒட்டல், பவுடர், இங்கி, சோப்பு, பேப்பர், டானிக், நியூஸ், ஹேர்ஆயில் ஸ்ளுே, பவுண்டு, வ#ர்ட்டு, கோட்டு, ஹாட்டு, பூட்டு, ஜாக்கிட்டு, சோடா,

கலர்.

முதலியவற்றை ஆங்கிலத் திசைச் சொற்களாகக் கொள்ள. லாம்.

அரசியல் : ஆளுவோரின் காரணமாகவும் மொழிக் கலப்பு ஏற்படுகின்றது. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் அயல்நாட்டுத் திசைச் சொற்கள் கலந்து விடுதல் இயல்பு. பல்லவ அரசர்கள் ஆண்ட காலத்தில் வட மொழிக்கு செல்வாக்கு மிக்கிருந்ததால் பல வடமொழிச்

14 யாழ்பாணத்து நல்லூர் திரு. ஞானப்பிரகாசர் வெளியிட்டவை.