பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

合80 தமிழ் பயிற்றும் முறை

சொற்கள் தமிழில் வந்து கலந்தன. முகலாயர் அரசு ஓங்கி யிருந்த காலத்தில் எத்தனையோ இந்துஸ்தானிச் சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன. வடமேற்குக் கணவாய்களின் வழியாக எத்தனையோ மரபினர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில் பல பாரசீகச் சொற்களும் அறபுச் சொற்களும் தமிழுக்கு வந்துள்ளன. கீழ்க்கண்டவை அவ்வாறு கலந்தவை.

ஜமீன், சிபார்சு, சிப்பந்தி, சிப்பாய், சுமார், தஸ்தா. வேஜா, பக்கிரி, பந்தோபஸ்து, மேஜை, ரஸ்தாஇவை பாரசீகச் சொற்கள்.

அனுமத்து, ஆசாமி, இரிசால், இலாகா, கஜானு, காடிவானு,சிம்டா, ஜப்தி, நகல், நாசூக், மாமூல், முனிசீப்பு, வசூல்-இவை அறபுமொழிச் சொற்கள். அந்தஸ்து, அசல், அபின், அம்பாரி, ஆஜர், இஸ்திரி, உஷார், கிச்சடி, குமஸ்தா, குல்லா, கோட்டா, செக்குபந்தி, ஜமுக்காளம், சாலக், ஜாபிதா, ஜமிக்கி, ஜல்தி, ஜோடு, சோதா, சால்வை, தபால், டாளு, தர்பார், துப்பட்டா, நபர், பஞ்சாயத்து, பத்தாய், பக்கா, பங்களா, பைசல், மாகாணம், ருஜா, லட்டு, தொப்பி, பாரா, மாசூல், மசாலை-இவை இந்துஸ்தானிச் சொற்கள்." இவற்றுள் சலாபம், சபாசு போன்ற சில சொற்கள் இலக்கியங்களிலும் ஏறிவிட்டன.

குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனே முத்துக் குமாரனைப் போற்றுதும்.' என்று குமரகுருபரர் சலாம் என்ற சொல்லை எடுத்து ஆண்டிருத்தலேயும்,

சுராபதி திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே.

  • இவை உயர்திரு செல்வகேசவராய முதலியார் அவர். களால் காட்டப்பெற்றவை.

' மீளுட்சியம்மை பிள்ளைத்தமிழ்-செய். 5.