பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

を534 தமிழ் பயிற்றும் முறை

சொற்கள் தமிழில் வந்து கலப்பதற்குத் தொல்காப்பியமும் நன்னூலும் வரையறை செய்திருப்பது போலவே, பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு நாம் விதிகள் செய்யவேண்டும்.

புதிய சொற்களும் சொற்ருெடர்களும் : இன்று தமிழ் மொழியில் எத்தனையோ பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் தமிழ்ச்சொல் உண்டு என்று கூறலாமாயினும், அச் சொற்களைத் தேடியலைவதைவிட ஒரளவில் வழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்களே ஏற்றுக் கொள்வதால் தவறு ஒன்றும் இல்லை. மோட்டார்’ என்ற சொல் இப்பொழுது வழக்கில் வந்துவிட்டது. அப்படி வந்த பிறகு தானியங்கி’ என்று சொல்லுதலும் எழுதுதலும் பொருந்தாது ; அப்படி வலிந்து ஒரு சொல்லேக் கண்டு பிடித்தலும் அவசியமில்லை. இப்படியே பைசிகிள்’ என்ற சொல் வழக்கில் வந்திருக்கின்றது. இதை ஈருருளி வண்டி’ என்று மொழி பெயர்க்கத் தேவையில்லை. இதையே ஆங்கிலம் தெரியாதவர்கள் மிதி வண்டி’ என்று வழங்கு கின்றனர். இது பொருத்தமான மொழிபெயர்ப்பாகத் தோன்றுகின்றது.

‘மிதி வண்டி’ என்ற சொல் புதுச் சொல்லாராய்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு சொல் எனக் கருதலாம். ஆங்கிலமே யறியாத பாமரத் தமிழ் மக்கள் புதுச் சொல்லமைக்கும் முறையும், அறிஞர்கள் அமைக்கும் முறையும் வேறுபடுவதை இச்சொற்ருெடர் நன்கு விளக்குகின்றது. அறிஞருக்குத் தோன்றும் முறை மொழி பெயர்ப்பு முறை. மக்களுக்குத் தோன்றும் முறை அச்சொல் உணர்த்தும் பொருளைத் தழுவிய முறை. ஆகவே, அறிஞர்கள் Bi-cycle என்ற ஆங்கில மொழிச் சொல்லை ஈருருளி வண்டி’ என்றனர் : மக்களோ அதன் சிறப்புத் தன்மையைக் கருதி மிதிவண்டி’ என்று கூறினர். இதேமாதிரி Book-post என்ற ஆங்கிலச் சொல்லை அறிஞர்கள் புத்தக அஞ்சல் என மொழி பெயர்த்தனர். ஆல்ை, இதன் சரியான மொழி பெயர்ப்பு "திறப்பு அஞ்சல் என்பது. புத்தகத்தை அஞ்சலில்