உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 525

அனுப்பும்பொழுது மூடாது திறந்தபடி வைத்து அனுப்புவதுபோலவே வேறு சில பொருள்களையும் திறந்தபடி அனுப்பலாம் என்ற வழக்கம் வந்தபொழுது அதையும் book-post என்ற சொற்ருெடரால் குறித்தனர். இதைத் தமிழில் மொழி பெயர்க்கும்பொழுது அதன் சிறப்புத் தன்மையைக் கருதி திறப்பு அஞ்சல் என்றே மொழி

Guuřáka:Gsusởr@th. Transfer certificate ST6örp old TË ருெடரை இடமாற்றத் தகுதிச் சீட்டு’ என்று மொழிபெயர்ப் பதைவிட இடமாற்றச் சான்றிதழ்’ என்ற மொழி பெயர்ப்பு சிறந்தது. இம்மாதிரி பல சொற்கள் தமிழ் மொழிக்கு வந்துள்ளன.

மக்களின் மொழி பெயர்ப்புமுறை இயற்கையை யொட்டியது. பொருளின் பிறமொழிப் பெயரைக் கருதாமல் தம் ஐம்புலனில் எப்புலனேப் புதுப் பொருள் கவருகின்றதோ அப் புலனுக்குத் தோன்றும் சிறப்பியல்புகளைக் கொண்டு மக்கள் புதுச் சொற்களே அமைக்கின்றனர். இந்த முறையில் Gas-light என்பதை நிலா விளக்கு என்பர். சில பொருள் களுக்கு அவ்ை தோன்றும் நாடு அல்லது ஊரைத் தழுவிப் பெயரிடுகின்றனர். இதற்கு மணிலாக் கொட்டை, சாத்துக்குடிப் பழம், குடகு ஆரஞ்சு, பம்பாய்க் கக்கூஸ், சீனிச் சர்க்கரை, பெங்களுர்க் கத்தரிக்காய், சீமைச் சுண்ணும்பு முதலியவை எடுத்துக்காட்டுக்களாகும். மற்றும் சில பொருள்களை மக்கள் அவற்றின் பயனேக் கொண்டு பெயரிடுகின்றனர். எடுத்துக்காட்டுக்கள் : வில் முடுக்கி, வெட்டிரும்பு, பாக்கு வெட்டி, திருப்புளி என்பவை.

பிறநாட்டு வரலாறுகளையும் அறிவியல் துறை நூல்களையும் தமிழ் மொழியில் பெயர்க்கும்பொழுது பல பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து கலக்கும். அவற். றைத் தமிழின் நீர்மைக் கேற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை மேலே குறிப்பிட்டோம். எத்தனையோ சொற்களை நம் மொழியில் நாமே உண்டாக்கிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக தொலை நோக்கி. உருப்பெருக்கி, ஒலிபெருக்கி, தொலைபேசி, தொலைக் காட்சி