பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 தமிழ் பயிற்றும் முறை

முதலிய சொற்கள் இவ்வாறு அமைந்தவை. ராஜாஜி அவர்களின் முயற்சியால் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க ஆதரவில் வெளி வந்திருக்கும் கலைச் சொற்கள்’ என்ற பட்டி யலிலும், உயர்திரு. தி. சு. அவிசிைலிங்கம் அவர்கள் முயற்சி wjm so Gossfish, 5316irst List of technical and scientific terms என்ற தொகுப்பிலும், திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் முயற்சியால் ஜி. ஆர். தாமோதரன் குழுவினர் வெளியிட்டுள்ள சொற்பட்டிகளிலும் இத்தகைய பல சொற்களைக் காணலாம்.:

இவற்றைத் தவிர, தமிழ்ச் செய்தித் தாள்கள் பல நல்ல சொற்களையும் சொற்ருெடர்களேயும் அளித்துள்ளன. சந்தர்ப்பங்களை யொட்டிப் பல சொற்கள் மொழி பெயர்க்கப் பெருமல் அப்படியே நம் மொழியில் ஏறியுள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்தாம்படை, அனுகுண்டு, குஸ்லிங், தீப் பொறி (Blitz), மார்க்கண்டேயம், மாரீசம், சாணக்கியம், இந்திரஜாலம் போன்ற சொற்கள் சந்தர்ப்பங்களே யொட்டி அழகாகப் பொருள் தருபவை, இவ்வாறு பலவாருக நம் மொழியுடன் இணைந்துள்ள சொற்கள் மொழிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளன.

தொடர்மொழிகளும் மரபுத் தொடர்களும் : நம் முன்னேர் பொருட் பொலிவுமிக்க அருந்தொடர் மொழி. களேயும் மரபுத் தொடர்களையும் பேச்சிலும் நூலிலும் பரக்க வழங்கி வந்துள்ளனர். அங்ங்னம் அவற்றை வழங்கிவந்த முறையே மரபாகும். அவற்றை நாம் நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து அளவாகக் கையாண்டால் நம்முடைய பேச்சும் எழுத்தும் சிறப்பாக அமையும். உயர்நிலப் பள்ளி வகுப்புக்களில் பயிலும் மரணுக்கர்கள் இவற்றைக் குறித்து ஓரளவு நன்கு அறிந்திருத்தல் அவ. சியம் ; மொழியாசிரியர்கள் அவற்றை மாணுக்கர்களின் பட்டறிவிற்குட்பட்ட நிகழ்ச்சிகளில் பொருத்தி வாக்கியத்தில் வைத்து வழங்கும்படி கற்பிக்க வேண்டும்.

  • முறையே 1988-லும், 1947-லும் 1960-லும் வெனிவந்தவை. -