பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 537

தொடர்மொழிகள் (Phrases): எழுவாயும் பயனிலையும் அமையாத சொற்ருெடர்கள் தொடர்மொழி எனப்படும். மரபாக அமைந்த தொடர் மொழிகளிலுள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பொருள் கொள்ளுதல் ஆகாது; அங்ங்ணம் கொண்டால் சொற்களின் பொருள் வேருகவும் சொற்கள் சேர்ந்ததொடர் மொழியின் பொருள் வேருகவும், அமையும். அடியிற் காணும் வாக்கியங்களிலுள்ள தொடர் மொழிகளைக் கவனிக்க.

(அ) இராமன் படிப்பதில் கண்ணுங்கருத்துமா யிருக்- கின்ருன். (ஆ) மனுநீதிச் சோழன் தன்னுயிர்போல் மன்னுயிரை

யும் காக்கும் பெருந்தகையாளன்.

(இ) பாடத்தை அடிமுதல் முடிவரை இன்ைெருமுறை

- எழுது . (ஈ) உலகப்பன் எலும்புக் தோலுமாய் இளைத்துப்போய்

விட்டான்.

இத் தொடர்மொழிகளைப்போல ஏராளமானவை நந்தமிழ் மொழியில் உள்ளன. அழுதகண்ணும் சிந்தியமூக்கும், அல்லும்பகலும், உச்சிமுதல் உள்ளங்கால் வரை, இடம் பொருள் ஏவல் என்பன அவற்றுட் சில.

மரபுச் சொல் (Idiom): ஒரு மொழிக்கே உரிய சிறப்பான சொல்லோ தொடரோ மரபுச் சொல்’ எனப்படும். அஃது இலக்கண வரம்புக்கு உட்படாதது. ஒரு மரபுத் தொடரில் உள்ள ஒரு சொல்லே நீக்கி வேருென்றை இட்டுக் கூற முடியாது. ஒரு மொழியில் உள்ள மரபுச் சொல்லைச் சொல் லுக்குச் சொல் பொருள் கூறிப் பிறமொழியில் பெயர்த்து எழுத இயலாது. ஒரு மரபுத் தொடரின் பொருளுக்கும் அதில் உள்ள தனித் தனிச் சொல்லின் பொருளுக்கும் வேற்றுமை உண்டு. எடுத்துக்காட்டாக அவன் எரிந்து விழு கின்ருன் என்ற வாக்கியத்தில் எரிந்து விழுகின்ருன்’ என்பதற்குச் சினந்து பேசுகின்றன் என்பது பொருள்.