பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 529

வரிடமும் அச் சிறுநூல் இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது.

இத்தகைய மரபுச் சொற்கள் சிறந்த தமிழ் இலக்கியங்களிலும் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக அலரறி. வுறுத்தல், ஆற்றுப்படை, உடன்போக்கு, பகற்குறி, இரவுக்குறி, குறியிடத்துய்த்தல், மதியுடம் படுத்தல் என்பவை அவற்றுட் சில; இவை அகப்பொருள் இலக்கணத்திற்குரியவுை. ஆகோள், சுரத்துய்த்தல், உண்டாட்டு, பிள்ளே வழக்கு, நெடுமொழி கூறல், கொற்ற வள்ளே, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி முதலியவை புறப்பொருள் இலக்கணத்திற். குரியவை. புறப்பொருளுக்குரியனவற்றுள் ஒரு சிலவற்றை உயர்நிலைப் பள்ளி வகுப்பு மாணுக்கர்களுக்குக் கற்பிக்கலாம். அகப்பொருள் இலக்கணத்திற்குரியவற்றைக் க ல் லூ ரி மானக்கர்களுக்கு அறிமுகப் படுத்தலாம்.

சில மரபுச் சொற்களைத் தொடக்கநிலைப் பள்ளி வகுப்பு மாளுக்கர்களும், நடுநிலைப் பள்ளி வகுப்பு மாளுக்கர்களும் அறிந்திருக்கவேண்டும். விலங்கு, பறவை முதலிய பிராணி களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவற்றில் இளையவற்றிற்கும் உரிய பெயர்களையும், பிராணிகளின் ஒலிகளுக்கு உரிய சொற்களையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

பிராணி ஆண் பெண் இளமை யானை களிறு பிடி கன்று குதிரை ஆண்குதிரை பெட்டை கன்று ஆடு கிடாய் பெண் ஆடு மறி மான் கலை பிணே மறி குரங்கு கடுவன் மந்தி குட்டி கோழி சேவல் பெட்டை } குஞ்சு புரு பேடை

மரவகைகளுள் தென்னக்குப் பிள்ளை' என்பதும் (தென்

னம் பிள்ளே), வாழை முதலியவற்றிற்குக்கன்று' (வாழைக்

கன்று) என்பதும் வழங்குவதற்கு உரியன. அன்றியும்,

த-35