பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 531

(4) ஒரு பொருட் பலசொற்கள் : சொல்லுதல், பேசுதல், கூறுதல், சாற்றுதல், மொழிதல், என்னுதல், கிளத்தல், பன்னுதல், நுவலுதல், உரைத்தல், நவிலுதல், பகர்தல், நொடித்தல், செப்புதல், அறைதல், மாறுதல், விள்ளுதல், விளம்புதல், புகலுதல், இசைத்தல், கழறுதல், இயம்புதல், கரைதல் என்று வரும் வினைச் சொற்களையும் இங்ங்னமே ஏனைய வினேச் சொற்களையும் கண்டறிந்து அவற்றின் நுண் பொருளையும் பொருள் சாயலையும் (Shades of meaning) es buqhel Glatiusorb.

(5) இணை மொழிகள் : நீக்கு போக்கு, நொண்டி சண்டி, பிய்த்துப்பிடுங்கி, புல்பூண்டு, சாக்குப்போக்கு, பிள்ளைகுட்டி, போக்கிரிசாக்கிரி, மூச்சுபேச்சு, விட்டகுறை தொட்ட குறை என்பன போன்றவற்றையும் காட்டலாம்.

(6) மரபுத் தொடர் மொழிகள் இடம் பொருள் ஏவல், ஆசைக்காட்டி மோசஞ் செய்து, தனுகரண புவன போகம் (உடல்கரண வுலகவின் பங்கள்), உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து, குமரி முதல் இமயம்வரை, கைகட்டி வாய்புதைத்து, ஒடும் பொன்னும் ஒப்ப நினைக்கும், நுண்மாண் நுழைபுலம், பிறப்பு பிணி மூப்பு சாக்காடு, வழிமேல் விழிவைத்து என்பன போன்று வருவன.

இவற்றிற்கேற்ற முழு விவரங்களையும் இலக்கண நூல் களில் கண்டு கொள்க'. இவ்வாறு வகுத்தும் தொகுத்தும் காட்டினுல் அவைபற்றிய அறிவு நன்கு வலியுறும்.

இலக்கணத்தை மொழிப்பாடத்தோடும் கட்டுரையோடும் பொருத்துதல் : இலக்கணத்தைக் கற்பது தனிப் பட்ட இலக்கண அறிவைப் பெறுவதற்கு மட்டு மன்று. இலக்கணப் படிப்பு நடைமுறையிலும் பயன்படவேண்டும். மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இலக்கணம் வழிகாட்டியாக அமையவேண்டும். இலக்கண வகுப்புக்களில் கற்பித்த இலக்கணக் குறியீடுகள், குறிப்புக்கள், விதிகள், தொடர்கள், சொல்லாட்சிகள், மரபுத் தொடர்கள்

21 தேவநேயன், ஞா. உயர்தரக் கட்டுரை இலக்கணம். (கழக வெளியீடு).