பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு-4 : ஆசிரியர் செயலாற்றும் வழிகள்

மிTணுக்கர்பால் மொழித்திறன்களை முட்டற நிலை நிறுத் துவதில் பணியாற்றும் ஆசிரியர்கள் தம் பணியை விரிவான திட்டத்தின்மூலம் நிறைவேற்ற வேண்டும். கல்வித் திட்டத்தையும் மொழிப் பாடத் திட்டத்தையும் நன்கு அறிந்த மொழியாசிரியர்கள் அவற்றை நன்முறையில் செயற். படுத்த வேண்டுமாயின், அவர்கள் மொழிப்பாடத் திட்டங் களே நன்கு ஆய்ந்து, அவற்றை ஆண்டின் பருவங்களுக்குரியவை இன்னவை, ஒவ்வொரு மரதத்திற்குரியவை இவை, ஒவ்வொரு வாரத்திலும் கற்பிக்க வேண்டியவை இவை எனப் பிரித்துக்கொள்ளவேண்டும். அன்ருடம் வகுப்பிற்குப் போவதற்கு முன்னர்க் கற்பிக்கப் போகும் படத்தைப் பற்றிய குறிப்பு எழுதவேண்டிய முறையை அவர்கள் நன்கு அறிந் திருத்தல்வேண்டும். தாம் கற்பிக்கும் முறைகளேயொட்டி இக்குறிப்பு அமையவேண்டும்.

ஏனைய ஆசிரியர்களைப் போலன்றி மொழியாசிரியர் கட்கு மிகவும் இன்றியமையாதனவாக இருப்பவை பாடப் புத்தகங்கள், துணைப் பாடப் புத்தகங்கள், பொதுப்படிப்பிற் குரிய புத்தகங்கள் முதலியவை. இப் புத்தகங்கள் நன்முறை யில் அமைதல் வேண்டுமாயின், அவை சில அடிப்படை விதிகளையொட்டி எழுதப்பெறல் வேண்டும். பாடப்புத்த கங்களில் இன்னின்ன பாடங்கள் தாம் சேர்க்கப்பெறல் வேண்டும் என்பதற்கும் சில விதிகள் உள்ளன. பள்ளி நூலகத்தில் பொதுப்படிப்பிற்குரிய புத்தகங்கள், தகவல் நூல்கள், அகராதிகள், கலைக் களஞ்சியம் போன்ற மேற் கோள் நூல்கள் இருத்தல் வேண்டும். இவற்றிலெல்லாம் மொழியாசிரியர்களின் கவனம் செல்ல வேண்டும். இந்த நூல்களைத் துணைக்கொண்டுதான் மாணுக்கர்களிடம் பல் வேறு மொழித் திறன்கள் அமையச் செய்தல் வேண்டும்.