பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 தமிழ் பயிற்றும் முறை

கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தம் பணி யின் பயனே அடிக்கடி மதிப்பீடு செய்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. இந்த மதிப்பீடு இரு வழியில் பய. னுடையது. ஒன்று, ஆசிரியர் தாம் பயிற்றும் முறைகளின் வெற்றி தோல்விகளை அளந்து அறிந்து அவற்றிற் கேற்ற வாறு தம் முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளத் துணை புரிவது; இரண்டு, மாணுக்கர்களும் தாம் கற்றவற்றை அவ் வப்பொழுது அறிந்து தமது நிலையை உணர உதவியாக இருப்பது. இன்று கல்வி உளவியலின் வளர்ச்சி காரணமாக கல்வித் துறை அளவியலில் எத்தனையோ வகையான சோதனைகள் தோன்றியுள்ளன. பழைய முறைகளிலும் புதிய முறைகளிலும் பல்வேறு மொழித் திறன்கள் அளந்தறியப் பெறுகின்றன. .

மேற் கூறியவை யாவும் இந்தப் பிரிவில் மூன்று இயல் களில் நன்கு விளக்கப்பெறுகின்றன.