பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 தமிழ் பயிற்றும் முறை

பொதுவாக அறிந்து கொள்ளலே பொறியியல் வல்லுநர் செய்யும் வேலையின் முதற்படியாகும். இம்மாதிரியே கல்வி நிபுணரும் மனித வாழ்க்கையைப்பற்றிய பல செய்திகளைப் பரந்த நோக்கத்துடன் காணவேண்டும் : பல்வேறு செய்தி. களேப்பற்றித் தனித்தனியாகவும் ஒன்ருேடொன்று பொருத். திப்பார்த்தும் ஆராயவேண்டும். இந்த அறிவின் அடிப். படையில்தான் அவர் கல்வியின் போக்கைப்பற்றித் திட்ட மிடவேண்டும். விவரங்களுடன் வேலை தொடங்குவதற்கு முன்னதாகக் கல்வித் திட்டத்தின் பொதுப்போக்கை அறுதியிட்டுக் கொள்ளவேண்டும். -

ஒருகாலத்தில் கல்வி நிபுணரும் சரி, வகுப்பு ஆசிரியரும் சரி அரை குறையான திட்டத்தைக்கொண்டு கல்வி. யைத் தொடங்கலாம் என்று எண்ணிய எண்ணம் மலே யேறிவிட்ட்து. பிற துறைகளில் மனிதனுடைய முயற்சிகளைப்பற்றிய வட்டறிவு எந்த வேலையாயினும் சரி ஆழ்ந்த அறிவும் கருத்துடன் அமைக்கும் திட்டமும் தேவை என் பதைக் காட்டுகின்றது. நகர்கள் பெருகிவரும் இக்காலத்தில் நகரமைப்புத் திட்டங்களைப்பற்றிக் கேள்வியுறுகின் ருேம்; அவை சரியாகத் திட்டமிடப்பெருவிட்டால் நேரிடும் கேடு. களையும் பிற விளைவுகளையும் அறிஞர்கள் அடிக்கடி எடுத்துக் காட்டத்தான் செய்கின்றனர். இம்மாதிரியே தொழில் துறை, வணிகத்துறைபோன்ற துறைகளிலும் நாட்டு முன்னேற்றத்தின் அடிப்படையில் பல திட்டங்கள் அமைக்கப்பெறுகின்றன. விடுதலை பெற்ற நம் நாட்டின் முன்னேற்றத்தைக்கருதி நடு அரசினர் ஐந்தாண்டுத் திட்டங்களே வகுத்து அவற்றைச் சிறப்புடன் நிறைவேற்றி வருவதை நாம் காண்கின்ருேம். ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பல துறை களில் எத்தனே வேலைகள் அமைக்கப்பெற்று செயற்பட்டு வருகின்றன !

ஒருகாலத்தில் திண்ணேப்பள்ளிக்கூடத்துடன் கல்வி முடிந்தது; குருகுலவாச முறையில் கல்வி முற்றுப் பெற்றது. அன்றைய நிலவேறு. இன்று அம்முறைகள் யாவும் நடை முறைக்குச் சரிப்பட்டு வரா. இன்றையச் சூழ்நிலையில்