பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 537

எண்ணற்ற கல்வி நிலையங்கள் தோன்றியுள்ளன ; அவற்றின் ஆட்சிமுறைபற்றி அரசாங்கம் கவனிக்கவேண்டி யுள்ளது ; அந் நிலையங்களில் கையாளப்பெற்றுவரும் கல்வித்திட்டத்தைப்பற்றியும் பாடத்திட்டங்களேப்பற்றியும் அரசாங்கம் சிந்தனே செலுத்தவேண்டியதாகவுள்ளது. அந் நிலையங்களில் எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்; அவர்கள் ஆற்றும் பணி ஒரு குறிப்பிட்ட முறையில் செல்லவேண்டுமானுல் ஆராய்ந்து அமைத்த கல்வித்திட்டம் ஒன்று இன்றியமையாதது. அது சரியான முறையில் செயற்பட்டு வருகின்றதா என்பதைக் கண் காணிப்பதும் மிகவும் இன்றியமையாதது.

பாடத்திட்டங்களைக் கட்டடத்தின் நீலப்பதிவுப் படங்களுக்கு (Blue-prints) ஒப்பிடலாம். அன்ருடம் கட்டட வேலையைக் கவனிக்கும் குத்தகைக்காரர் (Contractor) கட்டடம் கட்டுவதுபற்றிச் செய்யும் ஆயத்தவேலையை ஆசிரியர் அன்ருடம் ஆயத்தம்செய்யும் பாடக்குறிப்புக்களுடன் ஒப்பிடலாம். மறுநாள் நடை பெறவேண்டியவேலை ஒழுங்காகவும் த்டையின்றியும் நடை பெறுவதற்குக் குத்தகைக்காரர் முதல் நாள் நள்ளிரவு எண்ணெய் எரித்துக் கண்விழிக்க நேரிடுவதைப்போலவே நாள்தோறும் ஒவ்வொரு வாரத்திலும் நடை பெற வேண்டிய வேலைகளைப் பற்றி ஆயத்தம் செய்ய வேண்டிவரும். ஒரு கம்மியனே கைவினைஞனுே வினையாற்றுங்கால் தான் கையாளும் பொருள்கள், செய்யும்பொழுது நேரிடும் சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை அனுசரித்துத் தனது திட்டத்தையும் போக்கையும் கூட்டியோ குறைத்தோ மாற்றி யமைத்துக்கொள்வது போலவே, ஆசிரியரும் தன் பாடக் குறிப்புக்களே மாளுக்கரிடம் காணும் தனித்தன்மைகள், கற்பிக்கும் சூழ்நிலை ஆகியவற்றிற் கேற்ப மாற்றிக்கொள்ள நேரிடும்.

பல துறைக் கல்வித் திட்டங்கள் : மனிதனுடைய வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்த்து அறிஞர்கள் பல கல்வித் திட்டங்களே வகுத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலப் பகுதி. யிலும் உள்ள அத்திட்டங்கள் சில விவரங்களில் வேறுபட்