பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 தமிழ் பயிற்றும் முறை

கூடும். அந்த நிலையில் ஆசிரியர் பிள்ளைகளுடன் அள. வளாவி உணர்வொற்றுமை ஏற்படுத்திக் கொண்டு அவர்க. ருடன் உரையாடிக் கதை சொல்லி அவர்களின் கூச்சத்தை. யும் அச்சத்தையும் போக்கவேண்டும், பிறகு தெளிவாக. வும் திருத்தமாகவும் இயல்பாகவும் பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும் ; இவ்வாறு செய்யும்பொழுது பிள்ளைகளின் சொற்ருெகையைப் (Vocabulary) பெருக்குவதையும் நோக்கமாகக் கொள்ளவேண்டும். ஆண்டு முடிவதற்குள் அப் பிள்ளைகள் பெரும்பாலான தமிழ் எழுத்துக்களையும் தம் அனுபவத்திலுள்ள 300 தமிழ்ச்சொற்களையும் அவற்ருலான சிறுசிறு வாக்கியங்களேயும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகுப்பில் பல புதிய சொற்களைக் கற்று ஒரு சிறு நிகழ்ச்சியை முதலும் முடிவும் தெளிவாய்த் தோன்றுமாறு தம் மனத்தில் அமைத்து அதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற வேண்டும். 400 புதுச் சொற்களைப் பேசவும் எழுதவும் கற். பதுடன் படித்த பாடங்களில் வினவப்பெறும் விளுக்களுக்கு ஒவ்வொரு வாக்கியத்தில் விடையெழுதும் திறமையும் பெறவேண்டும். எழுதுகோலைச் சரியாகப் பிடித்து விரை. வாகவும் தெளிவாகவும் எழுதும் பயிற்சி யடையவேண்டும். இவ்வகுப்பு மாணுக்கர்கள் சிறு நாடகங்கள் உரையாடல்கள் ஆகியவற்றை நடத்திக்காட்டவும் பாப்பா பாட்டுக்களேயும் அபிநயப் பாட்டுக்களையும் பாடவும் ஆற்றல் பெறுவர். இவ் வகுப்பு மாணுக்கர்களிடம் வாய்க்குட்படித்தலும் வாய் விட்டுப் படித்தலும் 40/60 என்ற விகிதப் பொருத்தத்தில் அமையவேண்டும். மூன்ருவது வகுப்பிலுள்ள மாணுக்கர்கள் ஒரு சிறு நிகழ்ச்சியை முதலும் முடிவும் தெளிவாய்த் தோன்றவும் பொருத்தமற்ற விவரங்கள் புகாமலும் எடுத்துக் கூறும் ஆற்றலேப் பெறுவர். சிறு நாடகங்களை நடிக்கும் ஆற்றலும் எளிய செய்யுட்களேப் பார்த்துப் படித்தலும் பாராமல் ஒப்புவித்தலுமான ஆற்றலும் அவர்களிடம் அமையும். இங்கு 500 புதுச் சொற்களைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வர். எழுதும்பொழுது தெளிவும் விரைவும் இன்றியமையாதது என்று வற்புறுத்திக்கொண்டே