பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 543

திருத்தமும் அழகும் தேவை என்பதும் உணர்த்தப்பெறும். படித்த கதைகளைச் சுருக்கிக் கூறுவதிலும், வாக்கியத் தொடர்களின் முக்கியக் கருத்தை எடுத்துக்காட்டுவதிலும் போதிய பயிற்சிகளைத் தந்து மாணுக்கர்களிடம் பொருளறியும் திறனையும் வளர்க்க வேண்டும். இங்கு வாய்க்குட் படித்தலின் விகிதப் பொருத்தம் 40 -லிருந்து 60-ஆக உயரும். தமிழ்ப் பாடப் புத்தகத்திலிருந்தும் பிற பாடங்களி லிருந்தும் வினவப்பெறும் வினுக்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் விடை எழுதும் ஆற்றலைப் பெறுவர். பெயர்ச்சொல், வினைச்சொற்களே வேறுபடுத்திக் காட்டவும் அவற்றின் ஒருமைப் பன்மைகளைத் தெரிந்து கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பெறும். முற்றுப் புள்ளியின் பயனையும் அவர்கள் அறிந்துகொள்வர். இவ் வகுப்பில் படித்து வெளி வரும் மாளுக்கர்கள் தமிழ் நெடுங்கணக்கு வரிசை முறையை நன்கு தெரிந்துகொள்வர். அன்றியும், திருத்தமாகவும் தெளிவாகவும் பேசவும், தடுமாற்றமின்றிப் படிக்கவும், திருத்தமாக எழுதவுமான திறமையை முதல்மூன்று வகுப்புக்களில் மாணுக்கர்கரிேடம் உண்டுபண்ணிவிடலாம் என்று கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர். நான்காம் வகுப்பில் அவர்கள் ஒரு கதை அல்லது நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புக்களே நிரல்படக் கூறும் ஆற்றலேயடைவர். கட்டுரை எழுதும் பயிற்சிக்கு முதற்படியாக சமூக' வாழ்க்யைப்பற்றிய கடிதங்களும், சொந்தக் கடிதங்களும் எழுதப் பழகுவர். சொந்த அனுபவங்களைப்பற்றிச் சுருக்கமாகக் கட்டுரை எழுத ஊக்கம் அளிக்கப்பெறும். கையாளாவிடினும் பொருள்மட்டிலும் தெரிந்துள்ள சொற்களின் தொகையும் புதிய கருத்துக்களும் பெருகுவதற் கேற்றவாறு பயிற்சி தரப்பெறும். இவ்வகுப்பில் 700 புதிய சொற்களைப் படிக்கவும் எழுதவும் பிள்ளைகள் தெரிந்துகொள்வர். வாய். விட்டுப் படிப்பதை அறவே நீக்கி வாய்க்குட்படிப்பை வற்புறுத்தும் செயல் நடைபெறும். உரைநடைப் பகுதிகளையும் நன்கு தேர்ந்தெடுக்கப்பெற்ற எளிய கவிதைகளையும் ஊன்றிப் படித்துப் பொருளறியும் ஆற்றலையும் சொற்களின் தொகையையும் நன்கு பெருக்கிக் கொள்வர். ஐந்தாவது