பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 தமிழ் பயிற்றும் முறை

வகுப்பில் உதட்டைக்கூட அசைக்காமல் வாய்க்குட் படித்தல் வற்புறுத்தப் பெறும். புத்தகங்களைப் படிப்பதில் சுவை காணத் தலைப்படும் அளவிற்கு மாளுக்கர்களின் படிப்பு வளர்ச்சிபெறவேண்டும். அவர்கள் இவ்வகுப்பில் மேலும் 800 புதுச்சொற்களே ப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வர். நல்ல உரைநடைப் பகுதிகளேயும் கவிதைச் செல்வங்களையும் சுவையூட்டிக் கற்பிக்கவேண்டும். சமூகச் சார்பாகவும் வாணிகச் சார்பாகவும் நீண்ட கடிதங்களே எழுதவும், சாதாரண பொருள்களைப்பற்றி முதலில் ஒழுங்கான குறிப்புக்கள் எழுதிக்கொண்டு பிறகு சிறிய கட்டுரைகளே எழுதவும் பயிற்சி அளிக்கப்பெறும். பேச்சிலும் எழுத்திலும் நிகழும் பிழைகளே நீக்கும் பொருட்டு பலவித மொழிப்பயிற்சிகள் கொடுக்கப்பெறும். அதற்குள் இன்றியம்ையாத சில இலக்கணப் பகுதிகளும் நிறுத்தற்குறி. களும் அவர்கட்குக் கற்பிக்கப்பெறும். -

நான்கு, ஐந்து வகுப்புக்களில் கருத்தறிந்து வாய்க்குள்ளேயே செய்தித்தாள்கள், கதைகள், சிறு இலக்கியங்கள், கையெழுத்துப் படிகள் முதலியவற்றைப் படித்தறியும் ஆற்றலையும், அன்ருட வாழ்க்கைக்குரிய பொருள்களைப் பற்றியும் நிகழ்ச்சிகளை ப்பற்றியும் தெளிவாகவும் கோவையாகவும் பேசும் வாக்கு வன்மையையும் உண்டுபண்ணி விடலாம் என்று கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர். தாமாக நீண்ட கடிதங்களே எழுதவும் சிறு கட்டுரைகளை வரையவும் பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு முதல் ஐந்து வகுப்புக்கள் படித்து 2,700 சொற்களேத் தெளிவாக அறிந்து வெளியேறுகின்ற மாணுக்கர்களிடம் கடிதம் எழுதும் திறமையும் செய்தித் தாள்கள் படித்தறியும் திறமையும் நிரந்தரப் படிப்பறிவும் செவ்வனே அமையவேண்டும் என்பது தொடக்கநிலைப் பள்ளித் தாய்மொழிப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியக் கல்வித்திட்டத்தைப் பரிசீலனே செய்த ஹார்ட்டாக் குழுவினர் வெளியிட்டுள்ள குறிப்பில் கண்டபடி இவ்வறிவு பெற்றவர்கள் குடியரசில் தம் வாக்குரிமையின் பொறுப்பை