பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 தமிழ் பயிற்றும் முறை

படிவங்களுக்கு முறையே 300, 400, 500 வரிகள் கவிதைப் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், எண் சீர்களுக்கு மேற்பட்டுள்ள அடியை இரண்டு வரிகளாகக் கொள்ள. வேண்டும் என்றும் திட்டம் குறிப்பிடுகின்றது. அது போலவே, உரைநடைப் பகுதியில் 1, 2, 8-ஆம் படிவங். களுக்கு முறையே 16, 18, 20 பாடங்களே அமைக்கலாம் என்றும் திட்டத்தில் யோசனே கூறப்பெற்றுள்ளது. எத்தகைய கவிதைகள், எத்தகைய உரைநடைச் செல். வங்கள் தேர்ந்தெடுக்கப் பெறவேண்டும் என்ற விவுரங்களத் தமிழ்ப் பாடப் புத்தகங்களப்பற்றிக் கூறும் இடத்திலும், கட்டுரைப் பயிற்சி, இலக்கணப் பாடப்பகுதிகள் ஆகியவற்றை முறையே அவற்றைப்பற்றி விரிவாக ஆராயும் இடங்களிலும் கண்டுகொள்ளலாம். பொதுப் பகுதி சிறப்புப் பகுதி ஆகியவற்றின் அளவுகளும் ஆங்காங்கு குறிப் பிடப்பெற்றுள்ளன.

உயர்நிலைப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்திட்டம் (4, 5, 6 படிவங்கள்) : 1954-இல் சில திருத்தங்களுடன் அரசினரால் வெளியிடப்பெற்றுள்ள இத் திட்டம் வருங்கால ஆதாரப் பள்ளிகளில் ஐந்து ஆண்டுகள் மொழியறிவை வளர்த்து வெளிவரும் மாணுக்கர்களின் மொழியறிவுடன் புதிய கல்வித் திட்டப்படி நடுநிலைப் பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் பயின்று பெறும் மொழியறிவையொட்டி ஆயத்தம் செய்யப்பெற்றுள்ளது. மொழிக் கல்வியில் பொதுப் பகுதி, சிறப்புப் பகுதி ஆகிய இரண்டின் நோக்கத்தைப்பற்றியும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது.

பொதுப் பகுதியைக் கற்கும் மானுக்கர்கள் தாம் கற்கும் பொருள்களைப்பற்றியும், தம் பட்டறிவுக்குகந்த பொருள். களைப்பற்றியும் தமிழில் சரியாகவும் இலக்கணப் பிழைகளின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறவேண்டும் என்பது திட்டத்தின் நோக்கமாகும். அன்றியும், தாய் மொழியில் தம் கருத்தைத் தெரிவிக்கவும், பிறர் துஆன. யின்றிப் பயிலவும் ஆற்றலை உண்டு பண்ணவேண்டும் என்பதையும் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதே