பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 543

மொழியைச் சிறப்புப் பகுதியில் பயில்வோரும் பள்ளி வாழ்க்கை முடிவுற்றதும் இன்னும் அதிக மொழியறிவைப் பெறவேண்டும் என்றும், இம்மொழியறிவு பல்கலைக் கழகப் படிப்பின்றியே திறனுடனும் பண்பாட்டுடனும் வாமுப்பயன் படுமளவுக்கு முற்றுப் பெறவேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப் பகுதியைப் பயில்வோர் கல்லூரியில் இரண்டாண்டு பயின்ற பிறகு வெளியேறும் மாணுக்கர்களின் மொழியறிவைவிட அதிகம் பெறுவர் என்றும் கருதப்பெறுகின்றது.

நடுநிலப் பள்ளி மொழிப்பாடித்திட்டத்தில் குறிப்பிட்ட முறைகளேயே இப் பாடத்திட்டத்திலும் கையாண்டு மானுக் கர்களுக்கு உற்சாகத்தையும் விருப்பத்தையும் ஊட்டவல்ல பகுதிகளேத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் யோசனை கூறப்பெற்றுள்ளது. ஆங்குக் கூறப்பட்டுள்ள எல்லா விவரங்களும் ஈண்டும் பொருந்தும். பெரிதுப் பகுதியின் கீழ் எட்டு இராயல் பக்க அளவில் 4, 5, 6-ஆம் படிவங்கள் ஒவ்வொன்றுக்கும் 50 பக்கங்கள் உரைநடைப் பகுதியும் 4, 5-ஆம் படிவங்களுக்கு 400 வரிகளும் 6-ஆம் படிவத்திற்கு 500 வரிகளும் கவிதைப் பகுதியும், எட்டு பக்க இராயல் அளவில் 200 பக்கங்களைக் கொண்ட துணைப்பாட நூல்களும் இருக்கவேண்டும் என்று திட்டம் வரையறுத்துள்ளது. சிறப்புப் பகுதியின்கீழ் பொதுப்பகுதிக்கு இருப்பதைவிட 20-லிருந்து 30 பக்கங்கள் வரை அதிகமான உரைநடையும் 4, 5-ஆம் படிவங்களுக்கு 200 வரிகளும் 6-ஆம் படிவத்திற்கு 300 வரிகளும் அதிகமாகக் கவிதைப் பகுதியும் இருக்க வேண்டுமென்றும் திட்டத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது. பொதுப் பகுதியில் கற்கும் செய்யுட்களில் 100 வரிகளே மனப்பாடம் செய்யவேண்டும் என்றும், சிறப்புப் பகுதியில் இவ்வாறு மனப்பாடம் செய்யவேண்டியதில்லையென்றும் திட்டம் குறிப்பிடுகின்றது. இந்த வகுப்புக்களுக்குரிய உரைநடைப் பகுதிகள் பல ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கலாம். கட்டுரை இலக்கணம்பற்றிய விவரங்களே அவை கூறப்பெறும் இடங்களில் கண்டுகொள்க.