பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 தமிழ் பயிற்றும் முறை

களில் அமைந்திருக்கும் முறைக்கு அடிமைப்பட்டு அதையே மேற்கொள்ளுதல் சிறந்ததன்று பாடப்புத்தகங்கள் வழி. காட்டிகளேயன்றி மறைநூல்கள் அல்ல. மாளுக்கர்கள் மனப்பான்மைக் கேற்றவாறும். பாடங்களின் சுவைக்கேற்ற வாறும், பாடங்களின் எளிமை அருமை நோக்கியும் இப் பகுதி அமைப்பு முறை இருத்தல் வேண்டும். ஒப்படைப்பு முறை, நடிப்புமுறை, விளேயாட்டு முறை, செயல்திட்ட முறை முதலிய முறைகள்ே எந்த அளவில் எவ்வெவ்வாறு கையாளலாம் என்ற ஆராய்ச்சியும் ஓரளவு இப்பகுதி முறை யமைப்புக்குத் துணையாக இருத்தல்கூடும். பாடப் பகுதிகள் எவ்வாறு பிரிக்கப்பெறல் வேண்டும் என்பதுபற்றி முறைவல்லார் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் உளவியல் முறைப்படி அமைதல் நன்று என்றும், சிலர் காரண காரிய முறைப்படி அமைதல்தான் தக்கது என்றும் கூறுகின்றனர். பாலிங் என்பார் இரண்டும் கலந்ததொரு கலப்பு முறையே சிறந்தது என்று கூறுகின்ருர். பெரும்பாலும் இலக்கணப் பாடங்களே அமைப்பதிலும் மொழிப் பயிற்சி, கட்டுரை வேலைகளை அமைப்பதிலும்தான் அதிகக் கவனம் செலுத்த நேரிடும். கவிதை, உரைநடைப் பாடங் களே இவ்வாறு பகுதிகளாக அமைப்பதில் அவ்வளவு சிரமம் இராது.

(iv) அன்ருட வேலைக்குரிய பாடக் குறிப்புக்கள் பற்றிய ஆராய்ச்சி : பாடக் குறிப்புக்களைப் பாட ஆயத்தம்’ என்றும் வழங்குவர். தலைமை யாசிரியருக்குப் பயந்து பள்ளித் தணிக்கையாளரைத் திருப்திப் படுத்துவதற்காக், தான் சிறிதும் உணராமல் எழுதி ஆண்டுத் தணிக்கை முடிந்தவுடன் கைவிடப்பெறுபவை அல்ல இவை. பாடக் குறிப்புக்கள் என்றும் இடைவிடாமல் ஆசிரியர் செய்ய வேண்டிய தொழிலின் முதற்பகுதி , ஆசிரியத் தொழிலுக்கு மிகவும் இன்றியமையாத பகுதி. அதுவும் அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்குப் பாட ஆயத்தம்

° Bossing * Progressive Methods of Teaching in Secondary Schools uásio 205–209.