பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 553

அவசியமான தொன்று. அனுபவம் முதிர்ந்த ஜாம்ப வான்களுக்கும்” இத்தகைய ஓர் ஆயத்தம் சிந்தையிலாவது இருத்தல்வேண்டும் ; குறிப்பேட்டில் எழுத வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஏதாவது பாடத்தைப்பற்றிய ஒரு சட்டகம் இருந்தால்தான் பாடத்தை அதிலிருந்து நன்கு வளர்த்து மாணுக்கர்கள் கற்கும் காலத்தை வீணுக்காமல் தெளிவாகப் பயிற்ற முடியும். ஆயத்த முறைகளைப்பற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ நூல்கள் உள்ளன. தமிழிலும் ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை யெல்லாம் தாய்மொழியாசிரியர்கள் ஆழ்ந்து கற்றல் வேண்டும். பாடக் குறிப்புபற்றிய பல விவரங்களைத் தமிழாசிரியர்கள் நன்கு அறிந்து இருத்தல் வேண்டும். பாடக்குறிப்பு எவ்வாறு எழுதுவது என்பது பற்றி ஈண்டு ஒரு சிறிது கவனிப்போம்.

பாடக் குறிப்பின் முதற்படி நோக்கம் என்பது. எந்தப் பாடமாக இருந்தாலும் அதைக் கற்பிக்கவேண்டு மென்ருல் ஏதாவது நோக்கம் இருத்தல்வேண்டும். கவிதை, உரைநடை, இல்க்கணம் ஆகியவற்றுள் எதுவாக இருப்பினும் நோக்கம் இருக்கத்தான் செய்யும். இதைப் பொது நோக்கம், சிறப்பு நோக்கம் என இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கம்பராமாயணத்தில் பரதன் குகனுக்குத் தன் தாய்மார்களே அறிமுகம் செய்து வைக்கும் நான்கு ஐந்து பாடல்களை ஐந்தாம் படிவத்திற்குக் கற்பிப்பதாக இருந்தால் (i) பொது நோக்கத்தின் கீழ் இலக்கிய அறிவு வளர்ச்சியும் சொற்களஞ்சியப் பெருக்கமும்’ என்றும், (ii) சிறப்பு. நோக்கத்தின்கீழ் பாடல்களின் நயத்தை உணர்த்தி அவற்றைச் சுவைக்கும்படி செய்தலும், பாடல்கள் உணர்த்தும் பொருளறிவு பெறச்செய்தலும் என்றும் குறிப்பிடலாம்.

பாடக் குறிப்பின் இரண்டாவது படி ஆசிரியர் வகுப்பில் காட்டக்கூடிய துணைக்கருவிகள். தாய்மொழிப் பாடங்களில் எல்லாவற்றிற்கும் துணைக்கருவிகள் இருத்தல் வேண்டும் என்று எண்ணுதல் தவறு. பாட விளக்கத்திற்கு இன்றி