பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 தமிழ் பயிற்றும் முறை

யமையாதவை என்று கருதும் சாதனங்களை மட்டிலும் ஆசிரியர் பாடக் குறிப்பில் குறித்துக்கொண்டால் போதும். " அல்லே யாண்டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச* என்ற கம்பராமாயணப் பாடலை நான்காம் படிவ மானுக்கர். களுக்குக் கற்பிக்கவேண்டிய பாடத்தில் துணைக்கருவிகள் என்ற தலைப்பின்கீழ் (i) பாடலை விளக்கும் படம் (ஆசிரியர் தயாரித்தது) (ii) பாடப் புத்தகம் என்று குறிக்கலாம்.

பாடக் குறிப்பின் மூன்ருவது படி ஊக்குவித்தல். கற்பிக்கவேண்டிய பாடம் காவியமாக இருந்தால், அஃது எழுந்த காலம், எழுதிய ஆசிரியர் ஆகியவற்றை மாணுக்கர்களுக்கு அறிமுகம் செய்விக்கலாம். தனிப் பாடல்களாக இருந்தால் அப் பாடல்கள் எழுந்த சூழ்நிலையை விளக்கலாம். உஒரநடைப் பாடமாக இருந்தால் பாடத்திற்கேற்றவாறு ஊக்குவித்தலச் சிந்திக்கலாம். இலக்கணப் பாடமாக இருந்தால் சில எடுத்துக்காட்டுக்களால் இலக்கண விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தலாம்.

பாடக்குறிப்பின் நான்காவதுபடி பாட வளர்ச்சி என்பது. இது பாடத்திற்குப் பாடம் மாறும். புதிய பாடமாகத் தொடங்கப்பெற்றல் ஒரு மாதிரியாகவும், பெரிய பகுதியிலுள்ள பல பாடங்களாக இருந்தால் வேருெரு மாதிரியாக. வும் இருக்கும். பாட வளர்ச்சியில் பல சிறு படிகள் உள்ளன ; இவை யாவுமே மிகவும் முக்கியமானவை. (i) கற்பிக்கவேண்டிய பாடத்தையும் அதே வரிசையில் தொடர்ந்து கற்பிக்கப்பெற்ற பாடங்களேயும் இணைக்க முனைதல். ஆழ்ந்து சிந்தித்து ஆயத்தம் செய்யப்பெற்ற விளுக்களைக் கொண்டு இதைச் செவ்வனே நிறைவேற்றலாம். அனுபவமில்லா ஆசிரியர்கள் இந்த விளுக்களைப் பாடக் குறிப்பிலேயே எழுதிக் கொள்ளவேண்டும். நல்ல அனுபவமுள்ள ஆசிரியர்கள் சில குறிப்புக்களை மட்டிலும் குறித்துக்கொண்டால் போதுமானது. (ii) ஏற்கெனவே அறிந்துள்ளவற்றின் அடிப்படையில் புதிய பாடத்தைத் தொடங்குதல். கவிதை, உரைநடை, இலக்கணம் ஆகிய